ஆப்பிளின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ - எதை தேர்ந்தெடுக்கலாம்?

சற்று அளவில் பெரிதாக தெரியும் ப்ரோ-விற்கு பேசில்கள் மெலிந்து காணப்படுவதோடு, ஒரு முனையில் சில மெட்டல் புள்ளிகள் இருக்கின்றன. அவ்வளவு தான்.

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ ஆகிய இரண்டையும் மேலோட்டமாக பார்த்தால், அவ்வளவு பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக தெரிவதில்லை. சற்று அளவில் பெரிதாக தெரியும் ப்ரோ-விற்கு பேசில்கள் மெலிந்து காணப்படுவதோடு, ஒரு முனையில் சில மெட்டல் புள்ளிகள் இருக்கின்றன. அவ்வளவு தான்.

ஆப்பிளின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ - எதை தேர்ந்தெடுக்கலாம்?

இந்த துவக்க நிலை ஐபேட்-டிற்கான மேம்பாட்டை ஆப்பிள் நிறுவனம் வழங்கிய போதும், முழு அளவிலான இந்த இரண்டு டேப்லெட்களும் தோற்றத்திலும் சிறப்பம்சங்களிலும் காகித அளவில் ஒத்தாற் போலவே காட்சியளிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஆயினும், இரண்டிற்கும் இடையே சில கவனிக்கத்தக்க வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆப்பிள் ஹோப்ஸ் போன்ற மாணவர்களுக்கான அல்லது ஒரு சாதாரணமான ஐபேட்டை நீங்கள் வாங்க விரும்பினால், $649 என்ற விலையில் அமைந்த ஐபேட் ப்ரோ-வை விட, இழப்பதற்கு பெரியளவில் இல்லாத $329-க்கு கிடைக்கும் ஐபேட் வாங்குவது சிறந்தது.

உங்களுக்கு விருப்பமான ஐபேட்-டை தேர்ந்தெடுக்க உதவும் வகையில், ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ ஆகிய இரண்டின் சிறப்பம்சங்களையும் கீழே பட்டியலிட்டு உள்ளோம். தனித்தன்மை வகிக்கும் ஒரு சில வித்தியாசங்களை கீழே காண்போம்:

அம்சங்கள் - ஐபேட் - ஐபேட் ப்ரோ

டிஸ்ப்ளே - 9.7 இன்ச் - 10.5 இன்ச்
பகுப்பாய்வு - 2048 x 1536 - 2224 x 1668
முன்பக்க கேமரா - 1.2 மெகாபிக்சல் - 7 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா - 8 மெகாபிக்சல் - 12 மெகாபிக்சல் உடன் ஓஐஎஸ்
ஸ்டைலஸ் ஆதரவு - உண்டு - உண்டு
கீபோர்டு ஆதரவு - ப்ளூடூத் மட்டும் - ப்ளூடூத் அல்லது ஸ்மார்ட் கனெக்ட்டர்
செயலி - ஏ10 - ஏ10எக்ஸ்
நினைவகம் - 32/128 ஜிபி - 64/256/512ஜிபி
எடை - 1.03 பவுண்ட்ஸ் - 1.03 பவுண்ட்ஸ்
விலை - $329/$429 - $649/$799/$999
டச் ஐடி - முதல் தலைமுறை - இரண்டாம் தலைமுறை
பேட்டரி திறன் - 10 மணிநேரம் - 10 மணிநேரம்
மிஸ்க். - இல்லை - 120ஹெச்இசட் ரீஃபிரஷ் விகிதம், ட்ரூ டோன் டிஸ்ப்ளே

ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ ஆகியவற்றை வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில், ஐபோன் 7 இல் உள்ளது போன்று அதன் செயலியை ஏ10 ஆக மேம்படுத்தி உள்ளது. ஐபேட் ப்ரோவில் உள்ள ஏ10எக்ஸ் செயலியை விட, இது சற்று மெதுவாக செயல்படுவதால், அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

சிறிய அளவிலான ஐபேட்டில் பென்சில் ஸ்டைலஸ் ஆதரவை ஆப்பிள் நிறுவனம் அளிக்கிறது. இதன்மூலம் $99 விலையில் கிடைக்கும் பென்சில் ஸ்டைலஸை வாங்கினால், ஐபேட்டை இயக்க, குறிப்பு எடுக்க மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்தி படம் வரையவும் பயன்படுத்த முடியும்.

இரு டேப்லெட்களுக்கு இடையிலான வேறுபாடுகள்: ஐபேட் ப்ரோவின் திரையில் ஒரு விரிவான நிற வரம்பு, எதிரொலிப்பை தவிர்க்கும் பூச்சு, ட்ரூ டோன் சப்போர்ட் (நீங்கள் இருக்கும் அறையில் இருக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப சரிசெய்து கொள்ளும்) ஆகியவை காணப்படுகிறது. நீங்கள் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவில் வேலை செய்வதாக இருந்தால், இந்த கூடுதல் நிற திறன்கள் முக்கியத்துவம் பெறும்.

நீங்கள் ஒரு கலைஞராக இருந்து பென்சிலை பயன்படுத்தி பணியாற்றுபவராக இருக்கும்பட்சத்தில், வழக்கமான ஐபேட்டை விட ப்ரோவில் புதுப்பிப்பு (ரீஃபிரஷ்) அதிக எண்ணிக்கையில் ஏற்படுகிறது. அதன்மூலம் நீங்கள் வரையும் போது, சற்று அதிக பதிலளிப்பு தன்மை அதாவது அவ்வப்போது தானாக சேமிப்பது போன்றவற்றை உணரலாம். சாதாரணமாக பேசுவதற்கோ அல்லது கிறுக்குவதற்கோ இதை பயன்படுத்துவதால், $300 கூடுதலாக செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை. ஆனால் ஐபேட்டை பயன்படுத்தி தொழில்ரீதியாக பணியாற்ற விரும்பினால், மேற்கூறிய மேம்பட்ட திரை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆப்பிளின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ - எதை தேர்ந்தெடுக்கலாம்?

ஐபேட் ப்ரோவில் உள்ள மற்றொரு முக்கியமான வசதி என்றால், அதில் உள்ள கச்சிதமான இணைப்பாகும். இதன்மூலம் கீபோர்டுகள் மற்றும் கீபோர்டு தொடர்பான காரியங்களுடன் இணைப்பதற்கு எளிதாக உள்ளது. லேப்டாப்பிற்கு பதிலாக ஐபேட்டை பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், ஒவ்வொரு முறையும் ப்ளூடூத் மூலம் இணைக்க வேண்டிய தேவையில்லை. உங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். விலைக் குறைந்த ஐபேட் உடன் ஒரு ப்ளூடூத் கீபோர்ட்டை வேண்டுமானால் இணைக்கலாம். ஆனால் எப்போதும் கீபோர்ட்டை இணைப்பிலேயே வைத்திருப்பவர்களுக்கு அந்த முறை பொருந்தாது. ஏனெனில் இது தொல்லை மிகுந்ததாக தெரியும்.

ஐபேட் ப்ரோவின் டிஸ்ப்ளே ஏறக்குறைய கண்ணாடியை ஒத்தாக உள்ளதால், மற்ற சில காரியங்களுக்கும் பயன்படுத்த முடிகிறது. முன்பக்க கேமரா சிறப்பாக உள்ளதால், நீங்கள் ஏராளமான குழு அழைப்புகளுக்கு (பொதுவாக மாணவர்களுக்கு அல்ல) செல்லும் பட்சத்தில் இது முக்கியத்துவம் பெறும். மேலும் பின்பக்க கேமராவில் ஒளியியல் பட நிலைப்புத் தன்மை மற்றும் சிறந்த ஆட்டோபோக்கஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஐபேட் ப்ரோவில் ஸ்பீக்கர்கள் கூட ஒலியளவு அதிகமாக உள்ளது.

ஆனால் செலவிடும் பணத்திற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தால், சுமாரான திரையுடன் கூடிய இரண்டு ஐபேட்களை, ஒரு ஐபேட் ப்ரோவை வாங்கும் பணத்திற்கு வாங்க முடியும். அதே நேரத்தில் இன்று வேண்டுமானால் மேற்கூறிய இரண்டு ஐபேட்களும் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஐபேட் ப்ரோவில் முக அடையாளம் கண்டறியும் திறனை ஆப்பிள் நிறுவனம் கொண்டுவரலாம் என்ற வதந்திகள் உள்ளன. மேலும் இதன் வடிவமைப்பில் மறுஉருவாக்கம் மற்றும் பேசில்களின் அளவில் மேலும் மெல்லியதாக அமைந்த திரையும் அளிக்கப்படலாம். ஆனால் வரும் செப்டம்பர் மாதம் வரை, மேற்கூறிய ஐபேட் ப்ரோவில் எந்தொரு மாற்றமும் இருக்காது என்பதால், அவசரம் இல்லை என்றால், $649 என்ற கூடுதல் பணத்தை இப்போது செலவிடாமல் பொறுத்திருப்பது நல்லது.

Best Mobiles in India

Read more about:
English summary
Which one is best Apple ipad or ipad pro. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X