43-இன்ச் ஸ்மார்ட் டிவி இவ்ளோ கம்மி விலையிலா? பிரபல நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் டிவிகள்!
இந்தியாவில் மிகவும் பிரபலமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் சிறந்த வடிவமைப்பு மற்றும் தரமான மென்பொருள் வசதியுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் W2 சீரிஸ் மற்றும் 4K குவாண்டம் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆனது 32-இன்ச் எச்டி, 40-இன்ச் ஃபுல் எச்டி, 43-இன்ச் ஃபுல் எச்டி என்கிற மூன்று அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் 2x 36W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன இந்த டிவிகள். பின்பு இந்த டிவிகளில் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.
குறிப்பாக வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது இந்த அசத்தலான வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் டிவி மாடல்கள். பின்பு இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த டிவிகளின் ரிமோட்டில் அமேசான் வீடியோ, Zee5, Sony LIV மற்றும் Voot ஆகியவற்றிற்கான பிரத்யேக ஷார்ட்கட் கீ உள்ளன.
அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இந்த வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் டிவிகள். பின்பு Realtek பிராசஸர் கொண்டு இயங்குகின்றன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட், 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.
வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் விலை: 32-இன்ச் கொண்ட டிவியின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. பின்பு இதன் 40-இன்ச் டிவி ரூ.16,999-விலையிலும், இதன் 43-இன்ச் ஃபுல் எச்டி டிவி ரூ.17,999-விலையிலும் விற்பனை செய்யப்படும். அமேசான் தளத்தில் ஜூலை 14-ம் தேதி இந்த வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் டிவிகள் விற்பனைக்கு வரும்.
வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள் ஆனது 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகளில் 4கே ஆதரவு, HDR 10 பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. மேலும் பெசல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் வடிவமைப்புடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
அதேபோல் மீடியாடெக் 9062 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள். எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன இந்த வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள். குறிப்பாக இந்த இரண்டு டிவிகளில் கூகுள் டிவி இயங்குதளம் உள்ளது.

மேலும் 2 x 48W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன இந்த வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். பின்பு புளூடூத் மற்றும் வைஃபை ஆதரவுகள் கொண்டுள்ளன இந்த டிவிகள். அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளன இந்த டிவிகள்.
வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள் விலை: இதன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.27,999-விலையிலும், 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.32,999-விலையிலும் வாங்க முடியும். இந்த டிவிகளும் ஜூலை 14-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








