16GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. 2GB ரேம்.. பிரபல நிறுவனம் அறிமுகம் செய்த 65-இன்ச் 4K டிவி.. என்ன விலை?
பிரபலமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனம் இந்தியாவில் புதிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ரோஸ் கோல்டு நிறத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.
வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ரோஸ் கோல்டு அம்சங்கள்: இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது 3840 x 2160பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 + (HDR10+), எச்எல்ஜி (HLG), விவிட் டிஸ்பிளே (Vivid Display), சூப்பர் காண்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதேபோல் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவுடன் இந்த வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் ஒரு தியேட்டர் அனுபவம் கிடைக்கும். மேலும் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less design) கொண்டுள்ளது 65-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம்.
வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி (Westinghouse Quantum Series 65″ 4K Google TV) மாடலில் எம்டி 9062 (கார்டெகஸ் ஏ53 பிராசஸர்) உள்ளது. குறிப்பாக இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேசமயம் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வெஸ்டிங்ஹவுஸ் டிவி வெளிவந்துள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியில் உங்களுக்குப் பிடித்த அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். மேலும் MEMC டெக்னாலஜி ஆதரவுடன் இந்த 65-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
2 x 48W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Dolby Audio Stereo Box Speakers) உடன் இந்த வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இதுதவிர டிடிஎஸ் TruSurround டெக்னாலஜி ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குரோம்காஸ்ட் பிலிட்-இன், ஏர்பிளே (AirPlay), கேம் மோட் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி.

டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் மற்றும் ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூட்யூப், ஜீ5 உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த வெஸ்டிங்ஹவுஸ் டிவியில் பயன்படுத்த முடியும்.
வெஸ்டிங்ஹவுஸ் குவாண்டம் சீரிஸ் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.43,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 7-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த 65-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








