24-இன்ச், 40-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் அறிமுகம் செய்து கெத்து காட்டிய பிரபல நிறுவனம்.!
இந்திய சந்தையில் தற்போது அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபலமான Westinghouse நிறுவனம் Westinghouse Pi 24-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களையும், 55-இன்ச் Quantum Series மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் தரமான டிஸ்பிளே மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களும் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Westinghouse TV Pi series (24-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்)
Westinghouse TV Pi series ஸ்மார்ட் டிவிகள் ஏ பிளஸ் மற்றும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளன. பின்பு இதன் 24-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.Westinghouse TV Pi series 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920×1080 பிக்சல்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 24-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. பின்பு 24-இன்ச் 24-இன்ச் ஸ்பீக்கர்கள் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளும் Coaxial டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Westinghouse TV Pi series டிவிகள் ஆனது A35x4 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக Linux ஓஎஸ் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக யூடியூப், பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும்.
24-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை?
Westinghouse TV Pi series 24-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு Westinghouse TV Pi series 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள் யுஎஸ்பி போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன. மேலும் இப்போது Westinghouse TV Quantum டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Westinghouse TV Quantum Series 55-இன்ச் டிவி அம்சங்கள்
Westinghouse TV Quantum Series 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது யுஎச்டி டிஸ்பிள மற்றும் 3840 x 2160 பிக்சல்ஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஐபிஎஸ் பேனல் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக 8ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 2ஜிபி ரேம் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது Westinghouse TV Quantum Series 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் A35 பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது Westinghouse TV Quantum Series 55-இன்ச் மாடல். குறிப்பாக இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








