WD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..! விலை என்ன தெரியமா?

|

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் இன்று புதிய WD பிராண்டின் மை பாஸ்போர்ட் டிஎம் எஸ்எஸ்டி (My PassportTM SSD) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பாக்கெட் சைசில் கைக்கு அடக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய WD My PassportTM SSD சாதனம் பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் விற்பனை விலையுடன் பார்க்கலாம்.

புதிய WD My PassportTM SSD சாதனம்

புதிய WD My PassportTM SSD சாதனம்

புதிய WD My PassportTM SSD சாதனம் 500 ஜிபி முதல் 2 டிபி ஸ்டோரேஜ் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 500 ஜிபி வேரியண்டின் விலை ரூ .8999 ஆகவும், 1 டிபி மாடல் விலை ரூ .15,999 ஆகவும் மற்றும் இதன் 2 டிபி மாடல் ரூ .28,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் அக்டோபர் 30 வரை அமேசானில் கிடைக்கிறது. நவம்பர் 13 முதல், புதிய டிரைவ்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனையாளரிடம் கிடைக்கும்.

My PassportTM SSD சலுகை விலை

My PassportTM SSD சலுகை விலை

அமேசான் கிரேட் இந்தியா பெஸ்டிவல் விற்பனையின் போது புதிய My PassportTM SSD சாதனத்தின் மீது சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதவது, அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை, 500 ஜிபி மாடல் வேரியண்ட் ரூ .6999 ஆகவும், 1 டிபி வேரியண்ட் மாடல் ரூ .12,999 ஆகவும் மற்றும் 2 டிபி வேரியண்ட் ரூ .24,999 என்ற சிறப்பு விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 5 ஆண்டு லிமிடெட் வாரண்ட்டியுடன் வருகிறது.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்

ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்

புதிய எஸ்.எஸ்.டி சாதனம் 1050MB / s வரையிலான ரீட் வேகத்தையும், 1000MB / s வரையிலான ரைட் வேகத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய My PassportTM SSD பாஸ்வோர்டு இயக்கப்பட்ட 256-பிட் AES ஹார்டுவேர் என்க்ரிப்ஷன் உடன் தரமான பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. புதிய WD My PassportTM SSD சாதனம் பையில் அல்லது பாக்கெட்டில் வசதியாக பொருந்தக்கூடிய SSD ஆக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

போர்ட் விபரம்

போர்ட் விபரம்

புதிய My PassportTM SSD க்ரெய், ப்ளூ மற்றும் கோல்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த டிரைவ்கள் வைபிரேஷன் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன், 6.5 அடி வரை ட்ராப் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் வழங்குகிறது. கிளவுட் ஸ்டோரேஜ் சேவை மற்றும் பேக்கப் சேவைக்காகப் பிரத்தியேக சாப்ட்வெர் வழங்கப்பட்டுள்ளது. இதில் USB 3.2 ஜென் -2 தொழில்நுட்பம் மற்றும் USB-C கேபிள் மற்றும் USB-A அடாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Western Digital launches palm-sized My Passport SSD : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X