CES 2019: இதுவரை நீங்கள் கண்டிராத அற்புதமான கேஜெட்டுகள் 17.!

|

CES 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான மற்றும் அற்புதமான கேஜெட்டுகள் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது வரும் கேஜெட்டுகள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது. இப்போது வித்தியாசமான மற்றும் அற்புதமான கேஜெட்டுகளின் பட்டியலைப் பார்ப்போம்.

கோஹ்லர் நுமி 2.0 நுண்ணறிவு கழிப்பறை: Kohler Numi 2.0 Intelligent Toilet

கோஹ்லர் நுமி 2.0 நுண்ணறிவு கழிப்பறை: Kohler Numi 2.0 Intelligent Toilet

கோஹ்லர் நுமி 2.0 நுண்ணறிவு கழிப்பறை கண்டிப்பாக அனைவரின் மனதைக் கவரும் வகையில் உள்ளது என்றுதான்கூறவேண்டும். அதன்படி ஸ்மார்ட் டாய்லெட் நீர் சுத்திகரிப்பு மற்றும் உலர்த்தி செயல்பாடுகளை வழங்குகிறது. மேலும்இசை, தனிப்பட்ட சுற்றுப்புற விளக்குகளை கொண்டுள்ளது. மேலும் இந்த கழிப்பறையில் அமேசான் அலெக்சா குரல்வசதியும் உள்ளது.

Hepburn  அலெக்சா

Hepburn அலெக்சா

அமேசானின் அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கரின் தற்போதைய பதிப்புகள் மிகவும் நவீனமாக தெரிகிறது, ஆனால் அதைவிடசிஇஎஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட Hepburnஅலெக்சா அதிநவனீ தொழில்நுட்ப வசதியுடன் ஆர்வத்தை
தூண்டும் கேஜெட் ஆகும்.

இந்த சாதனம் முழு அலெக்சா ஒருங்கிணைப்புடன் கூடி ஸ்பீக்கர் அம்சத்தை கொண்டுள்ளது. பின்பு நீங்கள்எதிர்பார்க்கும் அனைத்து பணிகளையும் செய்யும், அதனுடன் பேட்டரிகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பமும்இதில் உள்ளது.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!

கிளியர்அப்- clearup

கிளியர்அப்- clearup

உங்கள் சருமத்தில் உள்ள தேவையில்லாத வடுக்களையும் மற்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த கிளியர்அப்சாதனம் உதவும். குறிப்பாக சிஇஎஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த சாதனம் இந்த கிளியர்அப்.சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ட்ரைடென்ட்-Trident

ட்ரைடென்ட்-Trident

ட்ரைடென்ட் என்பது ஒரு ஸ்மார்ட் வாட்டர் ஸ்கூட்டர் ஆகும். இது சிஇஎஸ் 2019-நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.குறிப்பாக இந்த ட்ரைடென்ட் கொண்டு நீரில் 45நிமிடங்கள் 40மீட்டர் வரை இயக்க முடியும். கண்டிப்பான இது
பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.

எல்ஜி ஸ்டைலர்

எல்ஜி ஸ்டைலர்

எல்ஜி ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதன்படி சிஇஎஸ் 2019நிகழ்வில்அருமையான எல்ஜி ஸ்டைலர் டேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த எல்ஜி ஸ்டைலர் என்பது ஒரு ஆடை ஹேங்கர் ஆகும். குறிப்பாக இது எல்ஜி ட்ரூஸ்டீமைப் பயன்படுத்தி ஆடைகளின்பாக்டீரியாவை அகற்றும் என்று கூறப்படுகிறது. பின்பு பயனர்கள் இதில் உலர்த்தலுக்காகவும், சுருக்கங்களை
போக்கவும் இந்த ஹேங்கரைப் பயன்படுத்தலாம்

பூனை டி.என்.ஏ சோதனை

பூனை டி.என்.ஏ சோதனை

சிஇஎஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அருமையான தயாரிப்பு என்னவென்றால் பூனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மரபணு சோதனை ஆகும். இதைக் கொண்டு ஒரு இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் அல்லது நோய் அபாயத்திற்கான குறிப்பான்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வியக்கவைக்கும் விலையில் அட்டகாசமான Samsung Galaxy Tab S6 5G சாதனம் அறிமுகம்.!வியக்கவைக்கும் விலையில் அட்டகாசமான Samsung Galaxy Tab S6 5G சாதனம் அறிமுகம்.!

சிம்பிள்ஹுமன் சென்சார்

சிம்பிள்ஹுமன் சென்சார்

சிஇஎஸ் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறந்த தயாரிப்பு தான் இந்த சிம்பிள்ஹுமன் சென்சார், இது இது குப்பை அகற்ற உதவும் உரு கேஜெட் ஆகும். சென்சார் மற்றும் குரல் அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்கான மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது. குறிப்பாக திறக்க மற்றும் மூடுவதற்கான குரல் கட்டளைகளுக்கு இது வேலை செய்யும்.

LavvieBot-லாவிபோட்

LavvieBot-லாவிபோட்

குப்பையை தானாக சுத்தம் செய்து தானாக நிரப்புகின்ற ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் லிட்டர் பெட்டியான LavvieBot மிகவும்பயனுள்ள தயாரிப்பாகும். மேலும் ஒவ்வொரு நாளும் குப்பை பெட்டி சுத்தமாக இருந்தால் கண்டிப்பாக பூனைகளுக்கும்ஆரோக்கியமா இருக்கும்.

ஒய் தூரிகை: Y Brush

ஒய் தூரிகை: Y Brush

விசித்திரமான தோற்றமுள்ள Y Brush உங்கள் வாயை 10 வினாடிகளில் சுத்தம் செய்வதாக உறுதியளிக்கிறது. பெயர் குறிப்பிடுவது போல் பல் துலக்குதல் 'Y' என்ற எழுத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நைலான் முட்கள் கொண்டஒரு சாதனம் ஆகும் .பின்புஇது மோட்டார் அடிப்படையில் இயங்குகிறது. இந்த சாதனம் விரைவில் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீட்வொர்க்ஸ் டியோ

ஹீட்வொர்க்ஸ் டியோ

Heatworks Duo Smart Untethered Carafe ஆனது ஒரு சுவாரஸ்யமான கேஜெட்டாகும், குறிப்பாக
சூடான நீருக்கான சரியான வெப்பநிலையை அமைக்க அனுமதிக்கிறது. மேலும் குளிர்ந்த நீர் பாயும்போது இந்தசாதனம் உடனடியாக "ஓமிக் வரிசை தொழில்நுட்பத்தின் மூலம் திரவத்தை சூடாக்கத் தொடங்குகிறது.

எலிவேட்

எலிவேட்

சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் ஹூண்டாயின் எலிவேட் வாகம் முன்மாதி வடிவத்தில், வழக்கமான நான்கு சக்கர வடிவமைப்பை விட நான்கு கால்கள் கொண்டுள்ளது. அதாவது இந்த வாகனம் கடுமையான நிலங்களில் கூட அருமை செயல்படும். இது ஸ்மார்ட் ஓட்டுநர் தொழில்நுட்பங்களுடன் உதவுகிறது.

மை ஸ்கின் ட்ராக் பி.எச்

மை ஸ்கின் ட்ராக் பி.எச்

சிஇஎஸ் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கின் ட்ராக் பி.எச் ஆனது அணியக்கூடிய, நெகிழ்வான சென்சார்,இது வியர்வையை அளவிடுவதன் மூலம் பயனர்களின் தோலின் pH அளவைக் காண்பிப்பதற்காக அதனுடன் இணைந்த பயன்பாட்டுடன் இணைகிறது. குறிப்பாக நுகர்வோருக்கு அவர்களின் தோல் நிலை குறித்த தெளிவான யோசனையை வழங்குகிறது இந்த தயா

சைபர்ஃபிஷிங் ஸ்மார்ட் ராட் சென்சார்

சைபர்ஃபிஷிங் ஸ்மார்ட் ராட் சென்சார்

சைபர்ஃபிஷிங் ஸ்மார்ட் ராட் சென்சார் ஆனது மீன்பிடி கியர் ரூ டேக்கிளின் துணை ஆகும். அதாவதுBasic 89 சென்சார் இரண்டு அடிப்படை ரப்பர் பேண்டுகளுடன் இணைகிறது மற்றும் உங்கள் மீன்பிடி செயல்பாட்டை பதிவு செய்கிறது, அதனுடன் இருப்பிடங்கள் மற்றும் கேட்சுகள் பற்றிய குறிப்பை உருவாக்குகிறது. இதுபோன்ற தகவல்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது எதிர்கால மீன்பிடி பயணங்களின் வெற்றியை மேம்படுத்தும் என்று
நம்பப்படுகிறது.

ஹைஸ்கின்-HiSkin

ஹைஸ்கின்-HiSkin

சிஇஎஸ் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஹைஸ்கின் ஒரு கையடக்க ஸ்கேனராகும். இது நெற்றி, கண்கள், கன்னம்,கழுத்து, போன்ற பகுதிகளில் தோல் நீரேற்றம் மற்றும் மெலனின் அளவை பகுப்பாய்வு செய்ய "மின்னணு
மற்றும் பரவல் ஃபோட்டான் பொறியியல்" ஐப் பயன்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதன் பயன்என்னவென்றால், தோல் மாற்றங்களை பதிவுசெய்கிறது மற்றும் அதை எவ்வாறு சிறந்த நிலையில் வைத்திருக்க
வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

ஜார்விஷ்

ஜார்விஷ்

ஜார்விஷ் என்ற ஸ்மார்ட் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆனது டிஜிட்டல் டிஸ்ப்ளே, 360 டிகிரி பின்புற மற்றும் முன் கேமராக்களைக் கொண்டுள்ளது,மேலும் இது அமேசானின் அலெக்சா குரல் உதவியாளருடன் இணக்கமானது. எனவே இந்த சாதனம் கண்டிப்பாக நல்ல வரவேற்பைபெரும்.

exoRehab- எக்ஸோ ரெஹாப்

exoRehab- எக்ஸோ ரெஹாப்

சிஇஎஸ் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சுவாரஸ்யமான தயாரிப்பு எக்ஸோசிஸ்டத்தின் எக்ஸோ ரெஹாப் ஆகும், இதுஒரு சிகிச்சை திட்டமாகும்,ஸ்மார்ட் புரோகிராமிங் அணியக்கூடியவை மற்றும் சென்சார்கள் மூலம் சாத்தியமான கேமிஃபிகேஷன் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

வால்நட் ஸ்பெக்டர் எக்ஸ்

வால்நட் ஸ்பெக்டர் எக்ஸ்

சிஇஎஸ் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வால்நட் ஸ்பெக்டர் எக்ஸ் ஆனது மின்சார ஸ்கேட்போர்டு" என்று அழைக்கிறது. இது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது.குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Weird Tech Gadgets at CES 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X