ரொட்டிசுடும் பாட்டிகள் கவனத்திற்கு-இதோ புதிய ஸ்மார்ட் கிச்சன் ரோபோட்.!

8 ஆண்டுகள் மற்றும் 11 வெவ்வேறு சுழற்சிகளுக்கு பிறகு, இந்த கணவன்,மனைவி இணைந்து செயற்கை நுண்ணறிவின் மூலம் ரொட்டி சுடும் ஸ்மார்ட் கிச்சன் ரோபோட்டான "ரொட்டிமேடிக்"ஐ உருவாக்கியுள்ளனர்.

|

பிரனோதி நகர்கர் மற்றும் அவரது கணவரும் இணைந்து வீட்டிலேயே எளிதாக ரொட்டி சுடும் வழியே கண்டறிந்துள்ளனர், அது தான் ரோபோட்கள்.

ரொட்டிசுடும் பாட்டிகள் கவனத்திற்கு-இதோ புதிய ஸ்மார்ட் கிச்சன் ரோபோட்.!

8 ஆண்டுகள் மற்றும் 11 வெவ்வேறு சுழற்சிகளுக்கு பிறகு, இந்த கணவன்,மனைவி இணைந்து செயற்கை நுண்ணறிவின் மூலம் ரொட்டி சுடும் ஸ்மார்ட் கிச்சன் ரோபோட்டான "ரொட்டிமேடிக்"ஐ உருவாக்கியுள்ளனர். கோதுமை மாவு மூலம் தயாரிக்கப்படும் தட்டையான இந்திய உணவுப்பொருளான இந்த ரொட்டி, பல பில்லியன் மக்களின் அன்றாட உணவாகும்.

எப்படி செயல்படுகிறது?

பயனர்கள் இயந்திரத்தின் கலன்களின் மாவு, எண்ணெய் மற்றும் தண்ணீரை நிரப்பவேண்டும். பின்னர் ஸ்டார்ட் பொத்தானை அழுத்துவதற்கு முன்னதாக, எவ்வளவு ரொட்டிகள் வேண்டும் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். சில நிமிடங்களில் ப்ரெஷ்ஷான ரொட்டிகள் வெளியே வரும். $999 (ரூ70,000) விலையுள்ள இந்த ரொட்டிமேடிக்-ஐ பின்வருமாறு பிரிண்டர் அல்லது காபி மேக்கருடன் ஒப்பிடுகிறார் நகர்கர்" பொத்தானை அழுத்துங்கள், தள்ளி நில்லுங்கள் , தேவையான பொருள் கைக்கு வரும்"

மெசின் லேர்னிங்

மெசின் லேர்னிங்

"இது ஸ்மார்ட்டானது, இதில் மெசின் லேர்னிங் உள்ளது, இதற்கு செயற்கை நுண்ணறிவு உள்ளது மற்றும் இதற்கெல்லாம் மேலாக இது பிணைக்கப்பட்டது" என கூறும் நகர்கர், முன்னதாக இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றியவர்.

15மில்லியன் டாலர்

15மில்லியன் டாலர்

தங்கள் சேமிப்பு முழுவதையும் இந்த ரோபோட்டிற்காக முதலீடு செய்த நகர்கர் தம்பதி, இந்த ரோபோட்டின் பின் இருக்கும் ஜிம்லிஸ்டிக்(Zimplistic) எனும் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக 15மில்லியன் டாலர் மூலதன நிதியாக திரட்டவுள்ளனர். இந்த ரொட்டிமேடிக்-ஐ பெறுவதற்காக சுமார் 3லட்சம் மக்கள் பதிவு செய்து இரண்டரை ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர், தற்போது இந்நிறுவனம் யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களை எடுத்துவருகிறது.

சோளமாவு ரொட்டி

சோளமாவு ரொட்டி

"இந்த ஆண்டின் இறுதிக்குள் 50,000 ரொட்டிமேடிக்-ஐ விற்று 50மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதுதான் தங்களது இலக்கு" என்கிறார் நகர்கர். மேலும் சோளமாவு ரொட்டி மற்றும் சுவையூட்டப்பட்ட ரொட்டி போன்ற அம்சங்களையும் இந்த ரொட்டிமேடிக்-ல் இணைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Watch This Smart Kitchen Robot Make a Flatbread In Minutes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X