ஈ ஓட்ட போகும் ஏசி கம்பெனிகள்.. பட்ஜெட் விலையில் அறிமுகமான Realme AC.. கரண்ட் பில்லை செம்மயா குறைக்குமாம்!
"இங்கயும் வந்துடீங்களா?" என்று கூறும்படியாக சீன நிறுவனமான ரியல்மி ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டில், பட்ஜெட் விலையின் கீழ் ஒரு புதிய ரியல்மி ஏசி (Realme AC) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அதென்ன ஏசி? அதன் விலை நிர்ணயம் என்ன? இந்த ஏசியில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஏசி எந்த இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சாதாரண ஏசி இல்ல.. 4-இன்-1 ஏசி!
உங்களில் சிலருக்கு ரியல்மி (Realme) நிறுவனத்தின் டெக்லைஃப் ஈகோசிஸ்டம் (TechLife Ecosystem) பற்றிய அறிமுகம் தேவைப்படாது.
மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ரியல்மி டெக்லைஃப் என்பது ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற தயாரிப்புகளை தவிர்த்து மற்ற தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்கும், ரியல்மி நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனத்தின் கீழ் ஒரு புதிய ஏர் கண்டிஷனர் (Air conditioner) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ரியல்மி 4-இன்-1 கன்வெர்ட்டபிள் இன்வெர்ட்டர் ஏசி (4-in-1 convertible inverter AC) ஆகும்!

அறையில் இருக்கும் ஆட்களுக்கு ஏற்றபடி ஏசி.. அதுவும் 20 நிமிடங்களில்!
ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஏசி மாடலில் ஃப்ளெக்ஸி கண்ட்ரோல் (Flexi Control) என்கிற தொழில்நுட்பம் உள்ளது. இது உங்கள் வீட்டின் அறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து வெவ்வேறு திறன்களில் ஏசியை இயக்க அனுமதிக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த 4-இன்-1 கன்வெர்ட்டிபிள் ஏசியானது காற்றோட்டத்தை அதிகரிக்கும் ரேபிட் கூல் (Rapid Cool) என்கிற அம்சத்துடன் வருகிறது.
ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் வெறும் 20 நிமிடங்களில் உடனடி குளிரூட்டும் விளைவை (Instant Cooling Effect) வழங்கும். மேலும் இந்த ஏசி, பரந்த அளவிலான ரிமோட் சென்சிங் கோணங்களையும் (Remote Sensing Angles) வழங்கும்.

மின்சார கட்டணத்தை தாறுமாறாக குறைக்கும்!
இந்த 4-இன்-1 கன்வெர்ட்டிபிள் ஏசியில், வேரியபிள் ஸ்பீட் கம்ப்ரெஸ்சார் (Variable speed compressor) உடனான இன்வெர்டர் தொழில்நுட்பம் (Inverter Technology) உள்ளது.
இது வேகமான, துல்லியமான மற்றும் திறமையான குளிரூட்டும் செயல்பாடுகளை உறுதி செய்கிறது. கூடவே மின் நுகர்வு குறைவாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் கம்ப்ரசரின் ஆயுளும் அதிகமாக இருக்கும்!
எல்லாவற்றை விடவும் முக்கியமாக இந்த ஏசியில் பில்ட்-இன் சர்க்யூட்கள் (Built-in circuits) உள்ளன. ஆகையால் இதற்கு ஸ்டெபிலைஸர் (Stabiliser) தேவைப்படாது.

இதில் 100% காப்பர் கன்டென்சர் உள்ளது.. ஆகையால்?
ரியல்மி 4-இன்-1 கன்வெர்ட்டபிள் இன்வெர்ட்டர் ஏசியில் உள்ள காயில்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், அவைகள் ப்ளூ ஃபின் தொழில்நுட்பத்துடன் (Blue Fin Technology) பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஏசியில் உள்ள 100% காப்பர் கன்டென்சர் (Copper Condenser) மற்றும் இன்னர்-க்ரூவ்டு காப்பர் பைப்ஸ் (Inner-grooved copper tubes) ஆனது ஏசிக்குள் ஏற்படும் வெப்பத்தை மிகவும் திறமையான முறையில் கையாளும். ஒட்டுமொத்தமாக இது ஏசியின் ஆயுளையும் அதிகரிக்கும்.
கடைசியாக, இந்த ஏசியில் ஆர் 32 ரெஃப்ரிஜிரென்ட் (R32 refrigerant) உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் மிகக் குறைவான ஜிஎச்ஜி உமிழ்வை (GHG Emission) உறுதிசெய்கிறது!

என்ன விலை.. எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்கலாம்?
ரியல்மி 4-இன்-1 கன்வெர்ட்டபிள் இன்வெர்ட்டர் ஏசியின் ஆரம்ப விலை ரூ.28,499 ஆகும். இது 1.0 டன் மற்றும் 1.5-டன் (ரூ.29,999) என்கிற இரண்டு ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இந்த ரியல்மி ஏசியை வாங்கலாம்!


Click it and Unblock the Notifications








