மினி ஏசி உடன் வரும் 6000mAh பவர் பேங்க்! அதுவும் வெறும் ரூ.1000 க்குள்!

|

"என்னப்பா புதுசு புதுசா ரீல் விடுறீங்க? 20,000mAh பவர் பேங்க் பார்த்து இருக்கோம்.. அவ்ளோ ஏன்? 30,000mAh பவர் பேங்க் கூட பார்த்து இருக்கோம்! இது என்னப்பா.. மினி ஏசி வச்ச் பவர் பேங்க்கு.." என்று கேட்க தோன்றுகிறதா?

ஆம் என்றால்.. கூச்சப்படாமல் 'டக்கென்று' கேட்டுவிடுங்கள்.. அப்போது தானே Power Bank With Mini AC என ஒன்று இருக்கிறதா? இல்லையா என்று எங்களால் பதில் சொல்ல முடியும்!

உண்மைதாங்க.. இந்த Power Bank-இல் Mini AC உள்ளது!

உண்மைதாங்க.. இந்த Power Bank-இல் Mini AC உள்ளது!

பருவமழைக்காலம் என்பதால் இந்தியா முழுவதும் மழை பெய்யும் என்று அர்த்தம் அல்ல. ஆங்காங்கே, இன்னமும் வெயில் கொளுத்திக்கொண்டு தான் இருக்கிறது.

அதேபோல, "ஒரு ஏசி வாங்கினால் நன்றாகத்தான் இருக்கும்!" என்று நினைக்கும் எல்லோராலும் குளிர்சாதன பெட்டிகளை வாங்கி விட முடியாது. ஏனெனில் பெரும்பாலான ஏசிகளின் விலை இமயமலையை விட உயர்வாக உள்ளது.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

இந்த இடத்துல தான் நீங்க புத்திசாலித்தனமா நடந்துக்கணும்!

இந்த இடத்துல தான் நீங்க புத்திசாலித்தனமா நடந்துக்கணும்!

நீங்கள், பெரிய தொகையை செலவு செய்து பெரிய ஏசி ஒன்றை வாங்க விரும்பவில்லை என்றால், புத்திசாலித்தனமாக அளவில் சிறிய மற்றும் பட்ஜெட்டிற்குள் அடங்கும் மினி, போர்ட்டபிள் ஏசியை வாங்கலாம்!

நல்ல ஐடியா தான்! மினி ஏசிகள் குளிர்ந்த காற்றை வழங்குவதோடு மின்சாரம் இல்லாமல் மணிக்கணக்கில் இயங்கும்! ஆனாலும் அதை வாங்க கூட என் பட்ஜெட் இடிக்கிறது என்றால்.. நீங்கள் ஏன்? மினி ஏசி உடன் ரூ.1000 க்குள் வாங்க கிடைக்கும் இந்த பவர் பேங்க்-ஐ வாங்க கூடாது?

ஒருபக்கம் 6000எம்ஏஎச் பவர் பேங்க் மறுபக்கம் மினி ஏர் கண்டிஷனர்!

ஒருபக்கம் 6000எம்ஏஎச் பவர் பேங்க் மறுபக்கம் மினி ஏர் கண்டிஷனர்!

அட ஆமாங்க! Vogek 2-in-1 6000mAh என்கிற பவர் பேங்க் ஆனது ஒரு Mini Air Conditioner உடன் வருகிறது. மினி ஏர் கண்டிஷனருடன் கூடிய Vogek 2-in-1 6000mAh பவர் பேங்க்கில் உள்ள மூன்று ஸ்பீட் ஃபேன்களானது அதனுள் உள்ள இண்டஸ்ட்ரியல் கிரேட் (Industrial grade) மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.

பவர் பேங்க்கின் முன்புறத்தில் உள்ள பவர் பட்டனை கொண்டு இதை நீங்கள் ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம்.

Power Bank பஞ்சாயத்து! பார்த்துப் பார்த்து வாங்கினால்.. பதட்டம் இருக்காது!Power Bank பஞ்சாயத்து! பார்த்துப் பார்த்து வாங்கினால்.. பதட்டம் இருக்காது!

கைக்கு அடக்கமான அளவில்.. பர்ஸுக்கு அடக்கமான விலையில்!

கைக்கு அடக்கமான அளவில்.. பர்ஸுக்கு அடக்கமான விலையில்!

Vogek 2-in-1 6000mAh பவர் பேங்க் ஆனது கைக்கு அடக்கமான, மிகவும் வசதியான வடிவமைப்பில் வருகிறது. ஆக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் எளிதாக எடுத்து செல்ல முடியும்.

இந்த கையடக்க மினி ஏசி + பவர் பேங்க் டிவைஸில் உள்ள 6000mAh பேட்டரியை நீங்கள் முழுவதுமாக ரீசார்ஜ் செய்தால், இதை 4 முதல் 6 மணி நேரம் வரை இயக்க முடியும் என்று Vogek நிறுவனம் கூறுகிறது.

 Vogek 2-in-1 6000mAh பவர் பேங்க் மினி ஏர் கண்டிஷனரின் விலை என்ன?

Vogek 2-in-1 6000mAh பவர் பேங்க் மினி ஏர் கண்டிஷனரின் விலை என்ன?

மினி ஏர் கண்டிஷனருடன் கூடிய Vogek 2-in-1 6000mAh பவர் பேங்கின் விலை ரூ.949 ஆகும். இது அலிஎக்ஸ்பிரஸ் வலைத்தளம் (Aliexpress.com) வழியாக வாங்க கிடைக்கிறது.

நாங்கள் இந்த டிவைஸை பிரபல இகாமர்ஸ் வலைதளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தேடி பார்த்தோம். ஆனால் அங்கே Vogek 2-in-1 6000mAh பவர் பேங்க் மினி ஏர் கண்டிஷனர் பட்டியலிடப்படவில்லை; அதாவது வாங்க கிடைக்கவில்லை!

Photo Courtesy: aliexpress.com

Best Mobiles in India

English summary
Want to Buy Unique Gadget Check This 6000mAh Power Bank With Mini AC Price Under Just Rs 1000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X