Home
Gadgets

கோடையை குதூகலமாக்க வந்திருக்கு புதிய கண்டுபிடிப்பு: “SwiftChill”.!

இத்தாலி மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் பங்கேற்ற இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பு அங்கெல்லாம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

By Abu Bakker Fakkirmohamed

“வசதியான (Comfort) வாழ்க்கைக்குக் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கம்.” என்கின்றனர் அஸ்வின் ஷெட்டி மற்றும் அசோக் ஷெட்டி ஆகிய இருவரும். தங்களுடைய நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தாங்கள் தொடங்கிய நிறுவனத்திற்கு Comfort Products லிமிடெட் என்னும் பெயரைச் சூட்டியுள்ளனர் இவர்கள். சாப்பிடுவதற்கு முன்னால் சில நிமிடங்களில் தேவையான உணவை மைக்ரோ ஓவன் மூலம் சூடுபடுத்தி உண்ண முடிவதைப்போல, பருகுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தேவைப்படும் பானங்களை குளிரூட்டிப் பருக முடியாதா? என்ற கேள்வியின் அடிப்படையில் பிறந்ததுதான் இந்த “SwiftChill” என்னும் மினி குளிர்சாதனப் பெட்டி.


“SwiftChill” பெயருக்கு ஏற்பத் தன்னுள் வைக்கப்படும் பானங்களை சில நிமிடங்களில் ஜில்லென்று மாற்றிவிடும். சிறிய வடிவில் மிக அழகான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாதனத்தில், ஒரு சமயத்தில், ஒரு ஒயின் பாட்டில் அல்லது மூன்று பீர் டின்கள், அல்லது சில குளிர் பான பாட்டில்கள் இவற்றுள் ஏதாவது ஒன்றை வைத்து குளிர்ச்சியூட்ட முடியும். அதிகமாகத் தேவைப்பட்டால் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாகக் குளிச்சியூட்டிக் கொள்ளலாம்.

“SwiftChill” சாதனத்தின் அமைப்பு

“SwiftChill” சாதனத்தின் அமைப்பு

இந்தச் சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள தட்டில் பானங்கள் அடங்கிய பாட்டில்களை வைத்து உள்ளே தள்ளி, எவ்வளவு நேரம் குளிரூட்ட வேண்டும் என்பதற்கு ஏற்ப நேரத்தைத் தேர்வு செய்துவிட்டால் போதும், குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே வைத்த பொருட்கள் குளிர்நிலையை அடைந்துவிடும். உடனடியாக குளிர்ச்சியூட்டும் இந்த மினி குளிர்சாதனப் பெட்டி 12 கிலோ எடை அளவுள்ளது. இந்தியச் சந்தைக்கு விற்பனைக்காக வரும்பொழுது, இதன் விலை 7500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும்.

செயல்படும் விதம்

செயல்படும் விதம்

காற்று, நீர், ஐஸ் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் பொருட்களைக் குளிர்ச்சியூட்ட முடியும். வழக்கமாக நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியில் காற்றின் மூலமாக குளிரூட்டல் நடைபெறும். ஆனால், "SwiftChill" சாதனத்தில் குளிரூட்டல் நடைமுறைக்கு நீர் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார சிக்கனம்

மின்சார சிக்கனம்

தேவையான நேரத்தில் மட்டுமே இது பயன்படுத்தப்படுவதால் மின்சாரத்தை சேமிக்க இயலும். குளிர் சாதனப் பெட்டியைப் பயன்படுத்தும் பொழுது, பொருள்களை உள்ளே வைத்து 24 மணி நேரமும் குளிர்ச்சி நிலையிலேயே வைத்திருப்பதால் அதிக மின்சாரம் செலவாகிறது. "ஐரோப்பிய கண்டத்தில் மட்டும், பானங்கள் அடங்கிய பாட்டில்களை குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ரெஃபிரிஜிரேட்டர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 90 டெரா வாட் அல்லது டிரில்லியன் வாட் (TW) மின்சாரம் செலவாகிறது. இவற்றுள் பெரும்பாலான பானங்கள் உடனடியாகப் நுகரப்படுவதில்லை. எனவே, அவற்றைக் குளீரூட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் வீணாக விரயமாகிறது.

80 டிரில்லியன் வாட்

80 டிரில்லியன் வாட்

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்விளக்குகளுக்கும் ஆண்டு ஒன்றுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 80 டிரில்லியன் வாட் (TW) மின்சாரம் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் பானங்களைக் குளிரூட்டுவததற்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்தை வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்குமான மின்தேவையை பெருமளவு பூா்த்தி செய்ய முடியும்." என்று புள்ளி விவரங்களை அள்ளித் தரும், கம்போர்ட் புராடக்ட் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர்களான அஸ்வின் ஷெட்டி மற்றும் அசோக் ஷெட்டி ஆகிய இருவரும், தங்களுடைய கண்டுபிடிப்பு தேவையில்லாமல் மின்சாரம் விரயமாவதைத் தடுக்கும் என உறுதி கூறுகி்ன்றனர். குளிர்பானங்களை எப்பொழுதுமே குளிரூட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்படும் பொழுது குளிரூட்டிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தன்மையும், தரமும் மாறாது எனவும் கூறுகின்றனர்.

  சூடேற்ற மைக்ரோ ஓவன்… குளிர்ச்சியூட்ட SwiftChill

சூடேற்ற மைக்ரோ ஓவன்… குளிர்ச்சியூட்ட SwiftChill

"சூடேற்றுவற்கு, மைக்ரோ ஓவனை அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவதைப் போலவே, குளிர்ச்சியூட்டுவதற்கு அனைவரும் SwiftChill சாதனைத்தைப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரும்" எனத் தங்கள் கண்டுபிடிப்புக்கு உள்ள வணிக ரீதியான வாய்ப்புகள் குறித்து இவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில் இச்சாதனத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய இவர்கள், இந்த முயற்சியில் வெற்றி பெற்றுத் தங்களுடைய புதிய கண்டு பிடிப்புக்கான பேடன்ட் உரிமையைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எங்கு சென்றாலும் வரவேற்பு

எங்கு சென்றாலும் வரவேற்பு

வணிகம் மற்றும் தொழில்களுக்கான இந்தியக் கூட்டமைப்பு (FICCI) நடத்திய, இந்தியப் புத்தாக்க வளர்ச்சித் திட்ட நிகழ்வில் பங்கேற்ற புதிய கண்டுபிடிப்புகளில் இக்கண்டுபிடிப்பு முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றது. பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (BITS) நடத்திய ஸ்டார்டப் நிறுவனங்களுக்கான போட்டியில், பங்கேற்ற 1200 ஸ்டார்டப் நிறுவனங்களுள் ஷெட்டியின் கம்போர்ட் புராடக்ட் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

இத்தாலி மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் பங்கேற்ற இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பு அங்கெல்லாம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியைத் தொடங்கத் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துள்ளது கம்போர்ட் நிறுவனம். மும்பையில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தையும், புனே நகரத்தில் சிறிய அளவிலான உற்பத்தி மையத்தையும் கொண்டுள்ள இந்நிறுவனம் இன்னும் பெரும் அளவிலான உற்பத்தியில் இறங்கவில்லை. " முதலில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதனை ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அவர்கள் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் முழு அளவிலான உற்பத்தியையும் விற்பனையையும் தொடங்கப் போகிறோம்" என்கிறார் ஷெட்டி.

சவால்களும் … சாதனைகளும்…

சவால்களும் … சாதனைகளும்…

உற்பத்திக்காக அதிகமான முதலீடு தேவைப்படுவதால் முதலீட்டாளர்களையும், பார்ட்னர்களையும் இந்நிறுவனம் தேடிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய தொழில் நுட்பத்தை மருந்துத் துறையிலும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சில குறிப்பிட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்லும் குளிர்சாதன டிரக்குகளை இயக்குவதற்கான முயற்சிகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. " பிற துறைகளில் உள்ளதைப் போல நாங்களும் பல சவால்களைச் சந்தித்து வந்தாலும் அனைத்தையும் வென்று சாதிப்போம்" என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர், மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கம்ஃபோர்ட் புராடக் நிறுவனத்தின் உரிமையாளர்கள், அஸ்வின் ஷெட்டி மற்றும் அசோக் ஷெட்டி ஆகிய இருவரும்.

Best Mobiles in India

English summary
Want to chill a drink in less than 3 minutes SwiftChill will do it instantaneously without ice ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X