Home
Gadgets

அந்த நாள் ஞாபகம்! மீண்டும் வாக்மேன் கலாச்சாரம்.. வாய்பிளக்க வைக்கும் விலையில் SONY Walkman அறிமுகம்!

80ஸ் கிட்ஸ் அல்லது "உண்மையான" 90ஸ் கிட்ஸ் கிட்ட போயி கேட்டு பாருங்க.. ஆயிரமாயிரம் லேட்டஸ்ட் ஹெட்போன்ஸ் வந்தாலும் கூட.. வாக்மேன் (Walkman) ஒன்றை கையில் வச்சிக்கிட்டு.. அதோடு கனெக்ட் ஆன வயர்டு ஹெட்போன்ஸை மாட்டிக்கிட்டு.. ஹாயா.. ஜாலியா.. கெத்தா நடக்குற சுகம் இருக்கே.. அடடா!

அதேபோல வாக்மேன் என்றதுமே சோனியின் (Sony) வாக்மேன்கள் தான் நம் பலரின் நினைவிற்குள்ளும் வந்து குதிக்கும்!

வாய்பிளக்க வைக்கும் விலையில் புதிய SONY Walkman அறிமுகம்!

மீண்டும் Walkman கலாச்சாரம்!

உங்களில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம் - நம்மையெல்லாம் மீண்டும் அந்த சுகமான கடந்த காலத்திற்குள்.. அந்த "வாக்மேன் கலாச்சாரத்திற்குள்" கொண்டு செல்லும் முனைப்பின் கீழ் சோனி நிறுவனம் இன்றும் வாக்மேன்களை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் நீங்கள் நினைப்பது போல அந்த காலத்து, பழைய வாக்மேன்களை அல்ல.. தற்காலத்திற்கு ஏற்ற லேட்டஸ்ட் வாக்மேன்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், வாய்பிளக்க வைக்கும் விலையில் புதிதாக ஒரு சோனி வால்க்மேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

வாய்பிளக்க வைக்கும் விலையில் புதிய SONY Walkman அறிமுகம்!

Sony NW-A306 Walkman இந்தியாவில் அறிமுகம்!

சோனி அதன் புதிய வாக்மேனை அறிமுகப்படுத்தியுள்ளது. சுவாரசியமாக இந்த லேட்டஸ்ட் வாக்மேன், முன்னதாக அறிமுகமான வாக்மேனை விட சற்றே மலிவாக உள்ளது!

உடனே ரூ.1000 அல்லது ரூ.2000 க்கு கற்பனை செய்துவிடாதீர்கள். சோனியின் புதிய NW-A306 வாக்மேனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.25,990 ஆகும்.

என்னது ரூ.26,000-ஆ? அப்போது இதற்கு முன் அறிமுகமான சோனி வாக்மேனின் விலை என்னவாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்க்ள். அது சோனி NW-ZX707 வாக்மேன் மாடலாகும், அந்த இந்திய விலை நிர்ணயம் ரூ.69,900 ஆகும்!

வாய்பிளக்க வைக்கும் விலையில் புதிய SONY Walkman அறிமுகம்!

ரூ.25,990 க்கு இந்த சோனி வாக்மேனில் அப்படி என்ன உள்ளது?

உண்மையில் சோனி NW-A306 வாக்மேன் மாடலானது முன்னதாக அறிமுகமான சோனி NW-ZX707 வாக்மேனுக்கான ஒரு மலிவான மாற்றாகும்.

வெறும் 199 கிராம் எடையுள்ள இந்த சோனி வாக்மேனில் 3.6-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. அதுமட்டுமல்ல.. இன்னும் நிறைய இருக்கிறது!

தெளிவான மற்றும் வலுவான சவுண்ட்!

ஹை-குவாலிட்டி சவுண்ட் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை விரும்பும் எவருமே இந்த சோனி வாக்மேனை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது.

ஏனென்றால் இதில் எஸ்-மாஸ்டர் எச்எக்ஸ் (S-Master HX) எனப்படும் ஸ்பெஷல் டெக்னாலஜியை கொண்டுள்ளது. இது தெளிவான மற்றும் வலுவான ஒலிக்காக, இந்த வாக்மேனிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

எந்த காலத்து பாட்டுனாலும் சரி.. குறையே இருக்காது!

இந்த வாக்மேனில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் டிஎஸ்இஇ (DSEE) அல்டிமேட் எனப்படும் ஸ்பெஷல் என்ஜினும் உள்ளது.

இது கம்ப்ரெஸ்டு ம்யூசிக் ஃபைல்களை கூட நிகழ்நேரத்தில் சிறப்பானதாக மாற்றும். இதன் மூலம், எந்தவொரு பாடலாக இருந்தாலும் சரி.. ஆழமான மற்றும் செழுமையான சவுண்ட் குவாலிட்டி உறுதி செய்யப்படும்!

பேட்டரி லைஃப் எப்படி இருக்கும்?

சோனி NW-A306 வாக்மேன் உண்மையிலேயே மிகவும் நீண்ட பேட்டரி லைஃபை வழங்கும். சோனி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வாக்மேன் 36 மணிநேர FLAC மியூசிக் பிளேபேக்கையும், 26 மணிநேரம் வரையிலான ஸ்ட்ரீமிங் ம்யூசிக் பிளேபேக்கையும் வழங்கும்.

இந்த SONY Walkman-ஐ வாங்குவது எப்படி?

சோனியின் லேட்டஸ்ட் NW-A306 வாக்மேனின் இந்திய விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. அதாவது இது நேற்று (அதாவது பிப்ரவரி 9 ஆம் தேதி) முதலே விற்பனைக்கு வந்தது,

இந்த வாக்மேனை வாங்க விரும்புகிறவர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு சோனி சென்டருக்கும் செல்லலாம். மேலும் இந்த சோனி வாக்மேன் முக்கிய எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்டல்களின் வழியாகவும் வாங்க கிடைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Walkman Culture Again in India Sony Launched New NW A306 Walkman Cheaper Than Previous Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X