Home
Gadgets

GST-க்கு ஒரு கும்பிடு.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் தளத்தில் விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவிக்கு (VW 43 inch Pro Series QLED TV) நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. ஏற்கனவே, ஜிஎஸ்டி விலை குறைப்பு போக மலிவாக கிடைக்கிறது. இப்போது, பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இந்த விடபுள்யூ டிவியின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் ஜிஎஸ்டி விலை குறைப்பு போக இந்த விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ,1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ஈஎம்ஐ வேண்டாதபட்சத்தில் ரூ.1,250 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம்.

GST-க்கு ஒரு கும்பிடு.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி!

ஆகவே, ரூ.15,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், எக்சேஞ்ச் போனஸ் மற்றும் டெலிவரி நாளில் இன்ஸ்டாலேஷன் போன்ற சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவி கிடைப்பது, சில பிராண்ட்களில் மட்டும்தான். அதிலும், இந்த விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியானது மற்ற பீச்சர்களிலும் மிரளவிடும்படி இருக்கிறது.

விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (VW 43 inch Pro Series QLED TV Specifications): இந்த ப்ரோ சீரிஸ் டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஏஐ பிக்சர் என்ஹான்சிங் (AI Picture Enhancing) கிடைக்கிறது.

இதுபோக விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. லோக்கல் டிம்மிங் (Local Dimming) மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்கள் விரும்பும் ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) கிடைக்கிறது. கலர் அக்யூரசி கொடுக்கும்படி 1 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், எட்ஜ்லெஸ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.

இந்த விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 2 ஜிபி ரேம் கிடைக்கிறது. அதேபோல 16 ஜிபிக்கான மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கிடைக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது.

கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். காஸ்டிங் ஆப்ஷன்களை பார்க்கையில், கூகுள்காஸ்ட் (Googlecast), ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) மற்றும் மீட்டிங் மோட் (Meeting Mode) கிடைக்கிறது. அதேபோல பர்சனல் ப்ரொபைல் (Personal Profile) மற்றும் கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) மட்டுமல்லாமல், கன்டென்ட் ரெக்கமெண்டேஷன் கிடைக்கிறது.

டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் கொண்ட 30W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூ-ரேய் பிளேயர், கேமிங் கன்சோல், 2 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் மற்றும் 1 ஹெட்போன் அவுட்புட் உள்ளது.

Best Mobiles in India

English summary
VW 43 inch Pro Series QLED TV Available Under Rs 16000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X