Home
Gadgets

வீட்டுக்கு வீடு இதான்.. பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 80W சவுண்ட்பார்.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

கம்மியான பட்ஜெட்டில் எச்டிஆர்10, ஏஐ பிக்சர் பூஸ்டர், டைனாமிக் கான்ட்ராஸ்ட் போன்ற பீச்சர்கள் கொண்ட கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆடியோ பிரியர்களை தட்டித்தூக்கும்படி 80W அவுட்புட் கொண்ட சவுண்ட் பாருடன் வியூ வைப் கிஎல்இடி டிவி (Vu VIBE QLED TV) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. டால்பி ஆடியோ, வாய்ஸ் ரிமோட், கூகுள் டிவி ஓஎஸ், 2ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த வியூ வைப் கிஎல்இடி டிவியின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

வியூ வைப் கிஎல்இடி டிவி அம்சங்கள் (Vu VIBE QLED TV Specifications): இந்த டிவியில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே மாடல்கள் வருகின்றன. 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடலில் விஏ பேனலும் (VA Panel), 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடலில் ஐஎபிஎஸ் பேனலும் (IPS Panel) வருகிறது.

வீட்டுக்கு வீடு இதான்! பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 80W சவுண்ட்பார் மாடல்!

3 சைடு பெசல்லெஸ்-டிசைன் (Bezel-less Design) கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன், கியூஎல்இடி டெக்னாலஜி (QLED Technology) மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த கியூஎல்இடி டிவியில் டைனாமிக் கான்ட்ராஸ்ட் (Dynamic Contrast) வருகிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) மற்றும் கேமிங் மோட் (Game Mode) ஏஎல்எல்எம் (ALLM) வருகிறது. அதேபோல ஏஐ பிக்சர் பூஸ்டர் (AI Picture Booster) சப்போர்ட் உள்ளது. இந்த வியூ டிவியில் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட குவாட் கோர் ஏஐ ப்ராஸசர் (Quad Core AI Processor) வருகிறது. ஆகவே, குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளிட்ட சப்போர்ட் வருகிறது. இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன.

பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வியூ வைப் கிஎல்இடி டிவியில் வாய்ஸ் சர்ச்ச் (Voice Search) மற்றும் இன்ஸ்டன்ட் பிக்சர் & சவுண்ட் கன்ட்ரோல் கொண்ட வியூ ஆக்டிவாய்ஸ் ரிமோட் (Vu ActiVoice Remote) வருகிறது.

16 ஜிபி மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இந்த டிவியில் சவுண்ட்பார் கூடுதலாக வருகிறது. இந்த சவுண்ட்பார் மூலம் 88W ஆடியோ அவுட் பெறலாம். அதேபோல டால்பி ஆடியோ (Dolby Audio), ப்யூர் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் (Pure Sound Enhancement), சவுண்ட் ஒன்லி மோட் (Sound Only Mode) வருகிறது.

மேலும், சினிமா, கிரிக்கெட் உள்ளிட்ட 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. இந்த டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

1 வருட வாரண்டி வருகிறது. இந்த வியூ வைப் கிஎல்இடி டிவியின் 43 இன்ச் (Vu 43VIBE24) மாடலின் விலை ரூ.30,999, 50 இன்ச் (Vu 50VIBE24) மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 55 இன்ச் (Vu 55VIBE24) மாடலின் விலை ரூ.41,999ஆகவும், 65 இன்ச் (Vu 65VIBE24) மாடலின் விலை ரூ.58,999ஆகவும் இருக்கிறது. அமேசானில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu VIBE QLED TV With Attached Soundbar Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X