Home
Gadgets

75 இன்ச் QLED டிவியை அறிமுகம் செய்த VU.. பில்ட்-இன் சவுண்ட்பார்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

வியூ (Vu) நிறுவனம் இந்தியாவில் பில்ட்-இன் சவுண்ட்பார் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட உலகின் முதல் QLED டிவியாக வியூ வைப் டிவி 2025 (Vu Vibe DV 2025) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

வியூ வைப் டிவி 2025 அம்சங்கள் (Vu Vibe DV 2025 Specifications): 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என ஐந்து அளவுகளில் வியூ வைப் டிவி 2025 மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவிகள் ஏ பிளஸ் கிரேடு கியூஎல்இடி (A+ grade QLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

75 இன்ச் QLED டிவியை அறிமுகம் செய்த VU.. பில்ட்-இன் சவுண்ட்பார்..

அதேபோல் டால்பி விஷன் (Dolby Vision), 400 நிட்ஸ் பிரைட்னஸ் (400 nits brightness), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR10) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த வியூ வைப் டிவி 2025 மாடல்களில் உள்ளன. எனவே இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியூஆன் ஏஐ பிராசஸர்(VuOn AI processor) உடன் இந்த புதிய வியூ வைப் டிவி 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவிகளில் டர்போ மோட் (Turbo mode) அம்சம் உள்ளன. இந்த அம்சம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த வியூ டிவிகள் இயங்குகின்றன. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவிகளில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட பில்ட்-இன் 88W சவுண்ட்பார் (88W soundbar) ஆதரவு கொண்டுள்ளன வியூ வைப் டிவி 2025 மாடல்கள். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன. அதுவும் இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவிகள் உடன் வருகிறது.

வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய வியூ வைப் டிவி 2025 மாடல்களில் உள்ளன. மேலும் பெசல்-லெஸ்-டிசைன், கேமரா சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது.

75 இன்ச் QLED டிவியை அறிமுகம் செய்த VU.. பில்ட்-இன் சவுண்ட்பார்..

வியூ வைப் டிவி 2025 விலை:
43 இன்ச் கொண்ட வியூ வைப் டிவி 2025 மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
50 இன்ச் கொண்ட வியூ வைப் டிவி 2025 மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
55 இன்ச் கொண்ட வியூ வைப் டிவி 2025 மாடலின் விலை ரூ.36,999-ஆக உள்ளது.
65 இன்ச் கொண்ட வியூ வைப் டிவி 2025 மாடலின் விலை ரூ.52,999-ஆக உள்ளது.
75 இன்ச் கொண்ட வியூ வைப் டிவி 2025 மாடலின் விலை ரூ.66,999-ஆக உள்ளது.

ஜூன் 24, 2025 முதல் அமேசான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை தளங்களில் இந்த வியூ வைப் டிவி 2025 மாடல்கள் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu Vibe DV 2025 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X