100-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Vu.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எச்டிஆர் 10.. என்ன விலை?
வியூ நிறுவனம் இந்தியாவில் புதிய வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் (Vu Ultra Large Smart TV Series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 85-இன்ச், 100-இன்ச் என இரண்டு மாடல்களில் இந்த சீரிஸ் வெளியாகி உள்ளது. அதுவும் ஏஐ பிக்சர், எச்டிஆர் 10, டால்பி அட்மாஸ் ஆடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவி மாடல்களில் உள்ளன. இப்போது வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் அம்சங்கள் (Vu Ultra Large Smart TV Series Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 85-இன்ச் மற்றும் 100-இன்ச் டிவிகள் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. மேலும் QLED பேனல், 3840 × 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, டால்பி விஷன், எச்எல்ஜி (HLG), எச்டிஆர் 10 (HDR10), 500 நிட்ஸ் பிரைட்னஸ், 94 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் (94% DCI-P3 color gamut support) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable refresh rate) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்கள் இந்த புதிய டிவிகளில் உள்ளன.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), வாய்ஸ் அசிஸ்டன்ட் ( Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன.
ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் (Apple HomeKit)ஆதரவுகளும் இந்த புதிய வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் மாடல்களில் உள்ளன. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் இந்த 85-இன்ச் மற்றும் 100-இன்ச் டிவிகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஏஐ பிக்சர், 4கே ஏஐ பிராசஸர் (4K AI Processor), இன்டெலிஜென்ட் சீன் ரெகக்னிஷன், AI அப்ஸ்கேலிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளன.

டால்பி அட்மாஸ் மற்றும் AI-powered room acoustic mapping and calibration ஆடியோ அம்சங்களுடன் இந்த புதிய டிவிகள் வெளியாகி உள்ளன. அதுவும் AI-powered room acoustic mapping and calibration என்பது உங்கள் அறையின் வடிவமைப்பு, சுவர்கள் மற்றும் பொருள்களுக்கு ஏற்ப ஒலியின் தரத்தை (Sound Quality) தானாகவே மாற்றி அமைக்கும் அதிநவீன தொழில்நுட்பமாகும்.
வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் 100-இன்ச் மாடல் ஆனது 108W 2.1-சேனல் VuFX, 2 ஸ்பீக்கர்கள், 1 சப்வூஃபர் ஆதரவுகளுடன் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன் 85-இன்ச் டிவி மாடல் ஆனது 65W 2.2-சேனல் VuFX, 2 ஸ்பீக்கர்கள், 2 வூஃபர்கள் ஆதரவுடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளும் சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும்.

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டிவிகளில் உள்ளன. மேலும் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode)ஆதரவுகளும் இந்த டிவிகளில் உள்ளன.
வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் விலை
வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் 100-இன்ச் மாடலின் விலை ரூ.2,50,000-ஆக உள்ளது.
வியூ அல்ட்ரா லார்ஜ் டிவி சீரிஸ் 85-இன்ச் மாடலின் விலை ரூ.1,50,000-ஆக உள்ளது.
இந்தியாவில் ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய டிவிகள் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
