மார்ச் 13: வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!
MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி.
வியூ (VU) டெலிவிஷன்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 13-ம் தேதி புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி மாடல். மேலும் தற்சமயம் பெங்களூருவில் நடைபெற இருக்கும் அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்களை வியூ டெலிவிஷன்ஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. வியூ ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சியோமி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சியோமி மி டிவி 4ஏ:
சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி டிஸ்பிளே மற்றும் 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராசஸர்:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகளை கொண்டுள்ளது. மேலும் மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் டி962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்ச்வால்:
MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி.


விலை:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-எனத் தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.22,999-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை வரும் மார்ச் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications