இதுதான் ஆஃபர்.. ரூ.4999 பட்ஜெட்ல 32 இன்ச் ஸ்மார்ட் டிவி.. டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. எந்த மாடல்?
வியூ (Vu) நிறுவனத்தின் 32 இன்ச் பிரீமியம் டிவி ஆனது மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன், 20W ஸ்பீக்கர்கள், பவர்ஃபுல் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி ((Vu Premium 32 inch LED Smart Linux TV) மாடலுக்கு 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி டிவி அம்சங்கள் (Vu Premium 32 inch LED Smart Linux TV Specifications): ஏ பிளஸ் கிரேடு பேனல் மற்றும் எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த 32 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1366 x 768 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஏ53 பிராசஸர் (A53 Processor) வசதியுடன் 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக மாலி-470 (Mali-470) கிராபிக்ஸ் பிராசஸர் வசதியும் இந்த டிவியில் உள்ளது. ஆகவே கேமிங் பயனர்களும் இந்த டிவியை வாங்கலாம். அதாவது இந்த டிவி மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
லினக்ஸ் (Linux) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட 20W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டிவியில் பல ஆடியோ அம்சங்கள் உள்ளன.

பெசல் லெஸ் டிசைன் வசதி உடன் 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த வியூ பிரீமியம் ஸ்மார்ட் டிவி.
ஸ்மார்ட் ரிமோட் உடன் 32 இன்ச் வியூ பிரீமியம் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. அதாவது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட். இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications