ரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!

|

இந்திய சந்தையில் வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது, காரணம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என்பதால் அதிக வரவேற்பை பெருகிறது.

 வு டெலிவிஷன்ஸ்

இந்நிலையில் வு டெலிவிஷன்ஸ் தனது வு பிரீமியம் தொடரின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும். மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 32-இன்ச்

தற்போது வு பிரீமியம் தொடரின் கீழ் 32-இன்ச் (32-inch Vu Premium TV) டிவி மற்றும் 43-இன்ச்(43-inch Vu Premium TV) டிவி மாடல்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்கள் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்!

 1920 x 1080 பிக்சல் திர்மானம்

1920 x 1080 பிக்சல் திர்மானம்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் பிரீமியம் டிவி எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366 x 768பிக்சல்கள் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 43-இன்ச் பிரீமியம்

டிவி புல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ஏ பிளஸ் கிரேடு பேனல்

ஏ பிளஸ் கிரேடு பேனல்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட் டிவிகளுமே ஏ பிளஸ் கிரேடு பேனல் வசதியுடன் வருகிறது, அதாவது விளிம்புகளிலும் பிரகாசத்தை அளிக்கும் என்று வு நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த டிவி மாடல்கள்

178 டிகிரி கோணத்துடன் 8ms மரெஸ்பான்ஸ் டைம் உடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

 அதிவேக சரவுண்ட் சவுண்ட்

அதிவேக சரவுண்ட் சவுண்ட்

இதைதவிர புதிய வு ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்டுடன் வருகின்றன, எனவே இது அதிவேக சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்கும் என வு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவி 20வாட் ஸ்பீகர் ஆதரவுடனும், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி 24வாட் ஸ்பீக்கர் வசதியையும் கொண்டுள்ளது.

கிரிக்கெட் மோட்

கிரிக்கெட் மோட்

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கிரிக்கெட் மோட் (Cricket Mode) வசதி இடம்பெற்றுள்ளது, இது இது நீங்கள் கிரிக்கெட் மேட்சை பார்க்கும் போதுஇ பந்தின் தெரிவுநிலையை மேம்படுத்துகிறது. அதன்படி சிறந்த பார்வை

அனுபவத்தைக் கொடுக்கும்.

64 பிட் குவாட் கோர் ப்ராசஸர்

64 பிட் குவாட் கோர் ப்ராசஸர்

இந்த புதிய வு ஸ்மார்ட் டிவிகளில் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் ஸ்டோர், கூகுள் கேம்ஸ், கூகுள் மூவிஸ் மற்றும் நெட்ஃபிலிக்ஸ், ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனங்கள். இதை தவிர க்ரோம்காஸ்ட் ஆதரவும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8ஜிபி உள்ளடக்க மெமரி

8ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நெட்பிலிக்ஸ்,ப்ரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் ப்ளே போன்ற உரிமம் பெற்ற ஆப்ஸ்களுக்கான 5 ஹாட்ஸ்கிகளைக் கொண்ட ரிமோட்டில் வருகிறது.

இந்த ஸ்மார்ட் டிவிகள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு ஆப்டிகல் அவுட், ஆர்எஃப் போர்ட், ஹெட் ஜாக் போர்ட், இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், லேன், ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

வு 32-இனச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

வு 43-இனச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vu Premium TV 32-Inch, 43-Inch Models With Dolby Audio, Android TV Debut in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X