மாஸ்டர்பீஸ் டிவி அறிமுகம் செய்த வியூ: விலைய கேட்ட தலை சுத்திரும்!

|

85 இன்ச் க்யூஎல்இடி 4கே டிஸ்ப்ளே, Dts மெய்நிகர் 50W சவுண்ட்பார், 2 ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு அட்டகாச அம்சங்களோடு வியூ ஸ்மார்ட் மாஸ்டர்பீஸ் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவி

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவி

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிமுகம் வியூ மாஸ்டர்பீஸ் டிவி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் QLED டிஸ்ப்ளே மற்றும் உள்ளமைக்கப்பட்ட 50W சவுண்ட்பார் உடன் வருகிறது. இந்த டிவியின் ப்ரீமியம் விஷயம் அதன் விலைதான். வியூ மாஸ்ட்ர் பீஸ் டிவி விலை ரூ.3.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

85 அங்குல 4கே டிஸ்ப்ளே

85 அங்குல 4கே டிஸ்ப்ளே

வியூ ஸ்மார்ட்டிவி விலை மட்டும் ப்ரீமியம் அல்ல அதன் வடிவமைப்பும் ப்ரீமியம் ரகமாகவே இருக்கின்றன. வியூ டிவி சிங்கிள் பிளாக் மற்றும் ஆர்மணி கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. 85 அங்குல 4கே டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் எச்டிஆர் 10 ப்ளஸ் டால்பி விஷன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் அணுகல்

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் அணுகல்

வியூ மாஸ்டர்பீஸ் டிவி ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் அணுகல் முறையுடன் கிடைக்கிறது. இது Dts மெய்நிகர் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜியுடன் வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது.

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைஃபை, ப்ளூடூத் 5.0, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், பல யூஎஸ்பி போர்ட்கள், ஆப்டிகள் பாயிண்ட் மற்றும் ஒஎக்ஸ் போர்ட் உள்ளடக்கம். வியூ மாஸ்டர் பீஸ் டிவி நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.

இன்டெல் கோர் ஐ5 செயலி

இன்டெல் கோர் ஐ5 செயலி

வியூ மாஸ்டர்பீஸ் டிவியின் தனித்துவ அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்டோஸ் 10 பிசி மேம்படுத்தல் ஆகும். இது இன்டெல் கோர் ஐ5 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உள்ளமைக்கப்பட்ட ஒரு கேமரா, வயர்லெஸ் கீபோர்ட் மற்றும் வயர்லெஸ் மைக்ரோபன் இயக்கமுறையை இந்த டிவி ஆதரிக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு டிவி தனித்தனி குவாட் கோர் செயலியில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற பிராண்ட்களுடன் நேரடி போட்டி

பிற பிராண்ட்களுடன் நேரடி போட்டி

வியூ நிறுவனம் இதுவரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவிகளை மலிவு விலையிலேயே அதாவது ரூ.13,000 என்ற வீதத்திலேயே விற்பனை செய்து வந்தது. தற்போது ப்ரீமியம் விலையில் அதாவது ரூ.3.5 லட்சம் மதிப்பில் அறிமுகம் செய்தது வாடிக்கையாளர்கள் கவனத்தை திரும்ப வைத்திருக்கிறது. வியூ இந்த அறிமுகத்தின் மூலம் சாம்சங், சோனி மற்றும் எல்ஜி போன்ற பிராண்ட்களுடன் நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Vu Masterpiece TV Launched in India With 85 inch Size, 50W Soundbar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X