சினிமா தியேட்டர் தோத்துச்சு போங்க! 98-இன்ச் ஸ்க்ரீன், 204W டிஜே ஸ்பீக்கர்! வாய் பிளக்க வைக்கும் விலை! என்ன TV?
Vu நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் Vu நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஏர மாஸ்டர்பீஸ் (Vu Masterpiece) 98-இன்ச், 85-இன்ச் QLED ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 3000 டென்சைல் ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளும் தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். இப்போது Vu மாஸ்டர்பீஸ் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Vu மாஸ்டர்பீஸ் 98-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4K QLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன. பின்பு இந்த டிவிகளில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன், 10 பிட் கலர் டெப்த், குவாண்டம் டாட் டெக்னாலஜி, காமா கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
சினிமா மோட், ஃபிளிம்மேக்கர் மோட், கேம் மோட், எச்டிஆர் கேமிங் உள்ளிட்ட பல சிறப்பாக அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த Vu மாஸ்டர்பீஸ் ஸ்மார்ட் டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். பின்பு இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த Vu மாஸ்டர்பீஸ் 98-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் 3ஜிபி ரேம் வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
எம்எஸ்12, டால்பி, டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களுடன் இந்த 98-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. பின்பு 204 வாட்ஸ் கொண்ட மாஸ்டர் ஸ்பீக்கர்கள், சப்-வூஃபர் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த டிவிகள் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
கூகுள் டிவி இயங்குதளம் மூலம் இந்த Vu மாஸ்டர்பீஸ் 98-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் இயங்குகின்றன. அதேபோல் ஹாட் கீ ஆதரவுடன் ரிமோட், வாய்ஸ் அசிஸ்டண்ட், டேபிள் டாப் ஸ்டாண்ட், வால் மவுண்ட் பிராக்கெட் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, ஸ்கிரீன் ஷேரிங், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட், இயர்போன் ஜாக், ஏவி, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஏர மாஸ்டர்பீஸ் ஸமார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகளும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அதேபோல் 98-இன்ச் Vu மாஸ்டர்பீஸ் QLED 4கே ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.6,00,000-ஆக உள்ளது. பின்பு 85-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.3,00,000-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களும் அமேசான் தளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








