Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43' இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?

|

Vu தொலைக்காட்சி நிறுவனம், அதன் புதிய Vu அல்ட்ரா 4K அம்சம் கொண்ட Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே கொண்ட டிவிகளை நேற்று மதியம் 12.30 மணி அளவில் யூடியூப் வழியாக ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. Vu நிறுவனத்தைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள எந்தவொரு டிவி பிராண்டும் இதற்கு முன்பு வீட்டிலிருந்து ஒரு தயாரிப்பு சாதனத்தின் அறிமுக வெளியீட்டை மேற்கொள்வது என்பது இதுவே முதல் முறை.

புதிய Vu அல்ட்ரா 4K டிவி

புதிய Vu அல்ட்ரா 4K டிவி

புதிய Vu அல்ட்ரா 4K டிவி, 43' இன்ச், 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் என நான்கு டிஸ்பிளே மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலைகளை இறுதியில் பார்க்கலாம், அதற்கு முன்பு இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்த்துவிடலாம். இந்த டிவியில் Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண டிஸ்பிளேவை காட்டிலும் 40% மேம்படுத்தப்பட்ட பிரைட்னெஸ் பயன்பாட்டை வழங்குகிறது.

Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே

Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே

கூடுதலான பிரகாசம், பேக்லைட் கண்ட்ரோலர், அப்பீட் சரவுண்ட், ப்ரோ-பிக்சர் கேலிபேரேட்ஷன் மற்றும் பேரண்டல் ப்ளாக் ஆகிய சிறப்பம்சங்களை இந்த புதிய Vu அல்ட்ரா 4K டிவி கொண்டுள்ளது. Vu நிறுவனம் இந்த புதிய டிவி சாதனம் Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே பகல் நேரத்தில்கூட சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற செய்கிறது. இதற்காக 40 சதவீத அதிக பிரைட்னெஸ் அளவை மேம்படுத்துகிறது.

பகல் நேரத்தில் டிவி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பு

பகல் நேரத்தில் டிவி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பு

இந்த ஊரடங்கு காலத்தில், வீட்டில் அடைந்துள்ள மக்கள் பலரும் பகல் நேரத்தில் டிவி பார்க்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு இந்த என்ஹான்ஸ்டு பிரைட்னெஸ் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது என்று Vu நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னொளி எல்.ஈ.டி வழியாக நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் உயர் செயல்திறன் கொண்ட சிறப்பு ஆப்டிகல் பிலிம், அதன் பரந்த பிரதிபலிப்பின் மூலம் பார்வைக் கோணத்தை அதிகரிக்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புரோ பிக்சர் கேலிபேரேட்ஷன்

புரோ பிக்சர் கேலிபேரேட்ஷன்

புதிய Vu அல்ட்ரா 4K டிவியில் புரோ பிக்சர் கேலிபேரேட்ஷன் என்ற புதிய அம்சம் உள்ளது, இது காமா திருத்தம், நாய்ஸ் குறைப்பு, வண்ண வெப்பநிலை, எச்.டி.எம்.ஐ டைனமிக் ரேஞ்ச் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களின் ஹோஸ்ட் போன்ற தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை பார்வையிட அனுமதிக்கிறது. இந்த அம்சத்தின் உதவியுடன் உங்கள் காட்சி திரை அனுபவத்தை உங்களால் அதிகரிக்க முடியும் என்று Vu நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப் பீட் சரவுண்ட் சவுண்ட் அம்சம்

அப் பீட் சரவுண்ட் சவுண்ட் அம்சம்

புதிய Vu அல்ட்ரா 4K டிவியில் உள்ள அப் பீட் சரவுண்ட் சவுண்ட் அம்சம் உங்கள் வீட்டிற்குள் ஒரு அரங்கத்தின் சிறந்த அனுபவத்தை பெற பார்வையாளருக்கு உறுதி செய்கிறது. இந்த அளவிலான தொலைக்காட்சியில் சேர்க்கப்பட்ட மற்றொரு முக்கியமான அம்சம் பேரண்டல் ப்ளாக் அம்சமாகும். குடும்பங்கள் ஒன்றாக வீட்டில் நேரத்தை செலவிடுவதால், இந்த அம்சம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது அவர்கள் எதை பார்க்க வேண்டும் என்று கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

தலைமை நிர்வாக அதிகாரியுமான தேவிதா சரஃப்

தலைமை நிர்வாக அதிகாரியுமான தேவிதா சரஃப்

புதிய டிவியின் அறிமுகம் குறித்து Vu டெக்னாலஜிஸ் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தேவிதா சரஃப் கூறுகையில், "கடந்த ஒரு மாதத்தில் Vu இந்தியாவில் # 1 தொலைக்காட்சி பிராண்டாக உருவெடுத்துள்ளது. மே மாதத்தில் மட்டும் சுமார் 50,000 மேற்பட்ட டிவி யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த வெற்றி எங்கள் தயாரிப்பு தரம், புதுமைகள், அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்கு கிடைத்த அடையாளம் என்று அவர் கூறினார்.

விலை என்ன?

விலை என்ன?

Vu நிறுவனத்தின் புதிய Vu அல்ட்ரா 4K டிவி எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று அவர் அறிமுகம் நிகழ்ச்சியின் பொழுது தெரிவித்திருக்கிறார். இறுதியாக Vu அல்ட்ரா 4K அறிமுகம் செய்தபின்பு அதன் விலை பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய Vu அல்ட்ரா 4K டிவி இந்திய சந்தையில் சுமார் ரூ .25,999 முதல் துவங்கி ரூ .48,999 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
VU Launches Four Ultra 4K TVs In India, Price, Specification And Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X