மிட்-ரேன்ஜ் பிரிவில் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 4கே ஸ்மார்ட் டிவி.!

இந்த சாதனங்களில் யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், 3எச்எம்ஐ போர்ட், ப்ளூடூத், ஈத்தர்நெட் போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

|

வியூ (VU) டெலிவிஷன்ஸ் நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு 4கே டிவி மாடல்களை தற்சமயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்து, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி மாடல்கள். ActiVoice-திறமையை கொண்ட 43-இன்ச்(42எஸ்யூ128), 49-இன்ச்(49எஸ்யூ131) மற்றும் 55-இன்ச்(55எஸ்யூ138) போன்ற 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த டிவி மாடல்கள்.

வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால், பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும். வியூ ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை சியோமி மி டிவி 4 மாடல்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4கே பேனல்கள்:

4கே பேனல்கள்:

தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் 4கே பேனல்கள் மற்றும்3840 x 2160 பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது. மேலும் வைட் ஆங்கில் திரை அம்சங்கள் கொண்டு இந்த டிவி மாடல்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி :

டால்பி :

இந்த சாதனங்களில் 10 வாட் x 8 ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு டால்பி டிஜிட்டல் டி.டி.எஸ் ஆடியோ டெக்னாலஜி வசதியும் உண்டு.
எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சேமிப்பு:

சேமிப்பு:

வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் இந்தஸ்மார்ட் டிவி மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

வியூ டெலிவிஷன்ஸ் 43-இன்ச்(42எஸ்யூ128) , 49-இன்ச்(49எஸ்யூ131)மற்றும் 55-இன்ச்(55எஸ்யூ138) போன்ற 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு யூடியூப், பேஸ்புக் வீடியோ, சோனி லிவ், நெட்ஃபிக்ஸ் போன்ற செயலிகளைபயன்படுத்த முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த சாதனங்களில் யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், 3எச்எம்ஐ போர்ட், ப்ளூடூத், ஈத்தர்நெட் போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
விலை:

விலை:

43-இன்ச்(42எஸ்யூ128) கொண்ட வியூ ஆண்ட்ராய்டு 4கே ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.36,999-ஆக உள்ளது, அதன்பின்பு 49-இன்ச்(49எஸ்யூ131)மற்றும் 55-இன்ச்(55எஸ்யூ138) ஸ்மார்ட் டிவி மாடல்கள் முறையே ரூ.46,999 மற்றும் ரூ.55,999-ஆக உள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வரும் 16-ம் தேதி இந்த டிவி மாடல்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vu Launches ActiVoice Lineup of 4K Smart TVs Starting at Rs 36999 in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X