Home
Gadgets

பழைய டிவி இனி எதுக்கு? விலை குறைப்பில் 50 இன்ச் 4கே டிவி.. கூகுள் டிவி OS.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

வியூ (Vu) நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த வியூ ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி அட்மாஸ், 16ஜிபி மெமரி, தரமான பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 50GLOQLED25 மாடல் நம்பர் கொண்ட வியூ GloLED அல்ட்ரா எச்டி 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Vu GloQLED 50 inch Ultra HD (4K) Smart Google TV 2025) மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.28,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட்டில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.26990 விலையில் வாங்கிவிட முடியும்.

பழைய டிவி இனி எதுக்கு? விலை குறைப்பில் 50 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?

வியூ GloLED 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Vu GloLED 50 inch 4K Smart Google TV Specifications): இந்த 50 இன்ச் வியூ ஸ்மார்ட் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான Glo AI பிராசஸர் உடன் இந்த அசத்தலான வியூ GloLED 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கிரிக்கெட் மோட், சினிமா மோட் பல பிக்சர் அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

குறிப்பாக விஆர்ஆர்(VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் இந்த டிவியின வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த வியூ 50 இன்ச் 4கே டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் இந்த வியூ GloLED 50 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த அசத்தலான டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன.

மேலும் குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. வைஃபை, ப்ளுடூத், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த வியூ GloLED 50 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu GloQLED 50 inch 4K Smart Google TV 2025 Price Drop on Flipkart Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X