Home
Gadgets

இந்தியாவில் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Vu.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. என்ன விலை?

வியூ நிறுவனம் புதிய வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 டால்பி எடிஷனை (Vu Glo QLED TV 2025 Dolby Edition) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் என ஐந்து அளவுகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 டால்பி எடிஷன் அம்சங்கள் (Vu Glo QLED TV 2025 Dolby Edition Specifications): பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்த டிவிகள் 4கே க்யூஎல்இடி (4K QLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 92 சதவீதம் NTSC கலர் உள்ளட்டபல்வேறு அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Vu.. என்ன விலை?

அதேபோல் ஏ பிளஸ் கிரேடு க்ளோ பேனல் (A+ Grade Glo Panel) ஆதரவுடன் வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுகளும் புதிய வியூ டிவிகளில் உள்ளன.

ஏஐ அப்ஸ்கேலிங் ( AI Upscaling)ஆதரவு இந்த புதிய டிவி மாடல்களில் உள்ளன. டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR10), எச்டிஎல்ஜி (HLG) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய வியூ 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாண்டர்ட் (Standard), டைனமிக் (Dynamic), கிரிக்கெட் (Cricket), சினிமா (Cinema), ஃபிலிம்மேக்கர் (FILMMAKER), பிசி/கேம் (PC/Game), எனர்ஜி சேவிங் (Energy Saving) உள்ளிட்ட பிக்சர் மோட்கள் இந்த புதிய வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்களில் உள்ளன.

1.5ஜிகாஹெர்ட்ஸ் வியூஆன் ஏஐ பிராசஸர் (1.5 GHz VuON AI Processor) வசதியைக் கொண்டுள்ளன புதிய வியூ டிவி மாடல்கள். கேம் மோட், ஏஎல்எல்எம் (ALLM), கிராஸ்ஹேர் (Crosshair), கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளன.

இந்தியாவில் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Vu.. என்ன விலை?

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் புதிய வியூ 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது. ஆட்டோ வால்யூம் கன்ட்ரோல் (Auto Volume Control), ஆடியோ ஒன்லி மோட் (Audio-only mode), ஈக்குலைசர் (Equalizer) போன்ற பல ஆடியோ அம்சங்களும் இந்த புதிய டிவி மாடல்களில் உள்ளன.

கூகுள் டிவி(Google TV) மூலம் வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்கள் இயங்குகின்றன. அதுவும் குரோம்காஸ்ட், கூகுள் பிளே ஸ்டோர் என அனைத்தையும் இந்த புதிய டிவிகளில் பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவிகளுடன் வருகிறது. ஆப்பிள் ஏர்ப்ளே, ஹோம்கிட், ஆண்ட்ராய்டு & ஐபோன் காஸ்டிங், புளூடூத் 5.3, டூயல்-பேண்ட் வைஃபை, லேன், கேமரா சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்களில்உள்ளன.

ஹெட்ஃபோன் ஜாக், ஆப்டிகல் அவுட்,ஏவி இன், ஈதர்நெட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய வியூ டிவிகளில் உள்ளன. குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த புதிய வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 மாடல்களை வாங்க முடியும்.

வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 விலை:
வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 43-இன்ச் மாடலின் விலை ரூ.24,990
வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 50-இன்ச் மாடலின் விலை ரூ.30,990
வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 55-இன்ச் மாடலின் விலை ரூ.35,990
வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 65-இன்ச் மாடலின் விலை ரூ.50,990
வியூ க்ளோ க்யூஎல்இடி டிவி 2025 75-இன்ச் மாடலின் விலை ரூ.64,990

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu Glo QLED TV 2025 Dolby Edition launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X