பழைய TV கதை முடிந்தது.. பட்ஜெட்ல 65 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. 16GB மெமரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் பிரீமியம் பீச்சர்களுடன் டிவி மாடல்களை களமிறக்கி வரும் வியூ நிறுவனமானது, இப்போது வியூ குளோ மினிஎல்இடி 4கே டிவி (Vu Glo MiniLED 4K TV) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 50W வியூஎப்எக்ஸ் ஆடியோ கிடைப்பதால், ஹோம் தியேட்டர் அனுபவத்தை எதிர்பார்க்க முடிகிறது.
பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) சார்கோல் கிரே (Charcoal Grey) கலரில் கிடைக்கிறது. சிங்கிள்-வயர் இன்ஸ்டாலேஷன் கொடுத்து மினிமல் கனெக்டிவிட்டி பீல் கொடுக்கிறது. வியூஆன் ஏஐ ப்ராசஸர் கொடுத்துள்ளது. 2.2 சேனல் வியூஎப்எக்ஸ் ஆடியோ சிஸ்டம் (VuFX Audio System) கிடைக்கிறது. இதில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளது.

இதுபோக 2 வூப்பர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, ஆடியோவில் பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். அதேபோல வீடியோவில் ஏஐ பிக்சர் குவாலிட்டி (AI Picture Quality), ஏஐ அப்ஸ்கேலிங் (AI Upscaling) மட்டுமல்லாமல், ஏஐ கலர் (AI Colour) மற்றும் ஏஐ கான்ட்ராஸ்டு என்ஹான்ஸ்மெண்ட் (AI Contrast Enhancement) கொடுக்கப்பட்டு உள்ளது.
வியூ குளோ மினிஎல்இடி 4கே டிவி அம்சங்கள் (Vu Glo MiniLED 4K TV Specifications): 43 இன்ச், 50 இன்ச், 55 இன்த் மற்றும் 65 இன்ச் டிவி கொண்ட மாடல்களில் வெளியாகி இருக்கிறது. 4K (3840 x 2160 பிக்சல்கள்) கியூடி மினிஎல்இடி (QD MiniLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்-அரேய் லோக்கல் டிம்மிங் கன்ட்ரோல் (Full Array Local Dimming Control) உள்ளது.
மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொண்ட மாடலாகவும் இந்த வியூ குளோ மினிஎல்இடி 4கே டிவி இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எம்இஎம்சி (MEMC) கிடைக்கிறது. விஆர்ஆர் (VRR) மற்றும் ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) உள்ளது.
கேம் மோட் (Game Mode) கிடைக்கிறது. 50W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வியூஎப்எக்ஸ் சவுண்ட் சிஸ்டமில் (VuFX Sound System) டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் வூப்பர்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டயலாக் என்ஹான்சர் (Dialogue Enhancer), சரவுண்ட் மோட் (Surround Mode) கிடைக்கிறது.
ஆடியோ ஒன்லி மோட் (Audio Only Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. 16 ஜிபி மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த வியூ குளோ மினிஎல்இடி 4கே டிவி இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. டூயல்-பேண்ட் வை-பை (Dual-Band Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது.
டூ-வே ப்ளூடூத் (Two-way Bluetooth) கிடைக்கிறது. 2 யூஎஸ்பி (USB), 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள் உள்ளன. ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஆப்டிகல் அவுட் (Optical Out) கிடைக்கிறது. ஏவி இன் (AV In) உள்ளது. 43 இன்ச் மாடலின் விலை ரூ.42,500 ஆகவும், 50 இன்ச் மாடலின் விலை ரூ.47,200ஆகவும் மற்றும் 55 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.53,000 ஆகவும் இருக்கிறது.
மேலும், 65 இன்ச் மாடலின் விலை ரூ.66,600 ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. வியூ ரீடெயில் ஸ்டோர்களிலும் வாங்கி கொள்ளலாம். 3 வருடங்களுக்கு மேனுபேக்ச்சரர் வாரண்டி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் டால்பி அட்மோஸ், டால்பி விஷன் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் வரவேற்க வேண்டியதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications