மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.! என்ன விலை?

|

பிரபலமான வியூ நிறுவனம் இந்தியாவில் Vu Glo LED TV மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் கிடைக்கிறது.

 சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

Vu Glo LED TV சீரிஸ் ஆனது Glo டிஸ்பிளே பேனலுடன் வெளிவருவதால் தனித்துவமான திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் முதல் 200MP கேமராவுடன் Motorola Edge 30 Ultra அறிமுகம்.! விலையை சொன்னா வாங்குவீங்களா?இந்தியாவில் முதல் 200MP கேமராவுடன் Motorola Edge 30 Ultra அறிமுகம்.! விலையை சொன்னா வாங்குவீங்களா?

பிரத்யேக பிக்சர் பிராசஸர்

பிரத்யேக பிக்சர் பிராசஸர்

Vu Glo LED TV மாடல்கள் பிரத்யேக பிக்சர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன. மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு,
டால்பி விஷன், ambient லைட் சென்சார், MEMC ஆதரவு, 94 percent colour gamut உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன்வெளிவந்துள்ளன இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகள்.

ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

 மென்பொருள்?

மென்பொருள்?

வியூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் டூயல் கோர் ஜிபியு உடன் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வியூ நிறுவனம்.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

 16ஜிபி ஸ்டோரேஜ்

16ஜிபி ஸ்டோரேஜ்

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் Vu Glo LED TV மாடல்கள் கூகுள் டிவியில் இயங்குகின்றன. பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒடிடி-இல் வெளியாகும் படங்களை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

 டால்பி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ்

டால்பி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ்

டால்பி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட நான்கு டவுன்-ஃபயர் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் 104W சவுண்ட் அவுட்புட் வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே இவற்றின் ஆடியோ பொருத்தவரை ஒரு தியேட்டர்
அனுபவம் கிடைக்கும் என்றே கூறலாம்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

கிரிக்கெட் மோட்

கிரிக்கெட் மோட்

அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங்கிற்கான VRR மற்றும் ALLM அம்சங்களையும் இந்த ஸ்மார்ட் டிவிகள் பேக் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கிரிக்கெட் பார்க்கும் போது சிறந்த பார்வை அனுபவத்திற்காக மேம்பட்ட கிரிக்கெட் மோட் வசதியை வழங்குகின்றன இந்த புதிய வியூ ஸ்மார்ட் டிவிகள்.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

என்ன விலை?

என்ன விலை?

50-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.
60-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.
65-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.60,999-ஆக உள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vu Glo LED TV series launched in India : Specs, Price, Sale, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X