அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!

|

வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) நிறுவனம்Cinema TV Action Series 55LX மற்றும் Vu Cinema TV Action Series 65LX என்கிற பெயரில் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

அணுகலுடன் இயக்குகின்றன.

Vu நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் கூகிள் பிளே அணுகலுடன் இயக்குகின்றன.

இது உயர் தரமான கேமிங்கிற்கான

அதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளன. மேலும் 3,840x2,160 பிக்சல் தீர்மானம், 400 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்

டிவிகள். மேலும் இந்த டிவி மாடல்கள் MEMC (motion estimation, motion compensation) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, இது உயர் தரமான கேமிங்கிற்கான மென்மையான இயக்க விகிதத்தை உறுதி செய்கிறது.

PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!

 டிவி மாடல்களில்

குறிப்பாக இந்த புதிய வு டிவி மாடல்களில் டைட்டானியம் க்ரே சவுண்ட்பார் மற்றும் பெஸல்லெஸ் ஃப்ரேம் போன்ற கவனிக்கத்தக்க விடயங்களும் உள்ளன. மேலும் இது 100W சினிமா ஸ்பீக்கர் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

ப்போது அறிமுகம் செய்துள்ள

VU நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூட்யூப், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் கூகுள் ப்ளே போன்ற பயன்பாடுகளுக்கான ஹாட்ஸ்கீஸ் உடன் வருகிறது.

HDR10 ஆதரவு மற்றும் டால்பி விஷன்

அதேசமயம் HDR10 ஆதரவு மற்றும் டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ள இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு இந்த இரண்டு வு டிவி மாடல்களிலும் கிரிக்கெட் மோட் வசதி உள்ளது.

 65-இன்ச் ஸ்

VU நிறுவனத்தின் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் 65-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளன இந்த வு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

புளூடூத் 5.0, மூன்று

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், இயர்போன் ஜாக் மற்றும் ஆர்.ஜே 45 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த இரண்டு வு ஸ்மார்ட் டிவிகள்.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

Vu Cinema TV Action Series 55LX, Vu Cinema TV Action Series 65LX மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கும். மேலும் வு 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. வு 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vu Cinema TV Action Series 55LX, 65LX Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X