Vu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! சற்று குறைவான விலை.!
பிரபலமான Vu நிறுவனம் இந்தியாவில் (Vu Cinema Smart TV) 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த Vu Cinema Smart TV ஸ்மார்ட் டிவி மாடல்கள் 2020 ஜூன் 23-ம் தேதி 12:00மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் வு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட வு நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 43-இன்ச் ஸ்மார்ட் டிவி 1920x1080 பிக்சல் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் ஆப்பிள் ஏர்ப்ளேக்கான ஆதரவு உள்ளது, மேலும் ஏபிளஸ் கிரேடு ஐபிஎஸ் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள், இது படத்தை மேம்படுத்துகிறது.

புதிய Vu Cinema Smart TV-களில் கிரிக்கெட் மோட், பிசி மற்றும் கேம் மோட், உள்ளிட்ட ஆதரவுகளுடன் MPEG Noise reduction ஆதரவு இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனங்கள் அடாப்டிவ் லூமா கட்டுப்பாட்டுடன்வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவிகளில் 40W இன்-பில்ட் சவுண்ட்பார் ஸ்டைல் ஸ்பீக்கர் சிஸ்டத்திற்கான டால்பி ஆடியோ ட்யூனிங் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இது இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களுடன் வருகிறது. இது ஒலி அனுபவத்தை மேம்படுத்தும் டால்பி ஆடியோ செயலாக்கத்துடன் வருகிறது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட வு ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனங்கள் பிளே ஸ்டோர், கூகிள் கேம்ஸ், கூகிள் மூவிஸ் போன்ற ஆப் பயன்பாடுகளுடன் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ,யூடியூப், ஹாட்ஸ்டார் மற்றும் பல சான்றளிக்கப்பட்ட ஆப் பயன்பாடுகளுடன் வருகிறது. இது ஸ்மார்ட் டிவிகளில் VOD உள்ளடக்கத்தை சீராக ஸ்ட்ரீம் செய்ய தொழில்நுட்ப உதவியுடன் வருகிறது. இது ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் கூகிள் குரோம் காஸ்ட்டையும் ஆதரிக்கிறது.

இந்த வு ஸ்மார்ட் டிவிகள் 64பிட் ஆக்டோ-கோர் செயலியை கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்கள் Vu ActiVoice Remote உடன் வருகிறது, இது தொலைதூரத்தில் பிரைம் வீடியோ, YouTube, ஹாட்ஸ்டார் மற்றும் Google Play போன்ற பயன்பாடுகளை இயக்க உதவும். ஆக்டிவாய்ஸ் ரிமோட் மூலம் வீட்டைச் சுற்றியுள்ள ஸ்மார்ட் சாதனங்களையும் ஒருவர் கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆர்சிஏ, ஆர்எப், ஹெட்போன், லேன், வைஃபை, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய வு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

புதிய 32-இன்ச் Vu ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
புதிய 43-இன்ச் Vu ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.
சியோமி, சாம்சங் போன்ற ஸ்மார்ட் டிவிகளை விட இந்த Vu ஸ்மார்ட் டிவிகள் சற்று குறைவான விலையில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications