பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 65 இன்ச் Glo MiniLED டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
வியூ நிறுவனத்தின் குளோ மினிஎல்இடி டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றன. இதில் பெரிய டிஸ்பிளேவுடன் கிடைக்கும் வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி மாடலானது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதனால், விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி விலைக்கு வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.58,490 விலைக்கு வாங்கலாம். இந்த விலையில் இருந்து ரூ.1,753 தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி அம்சங்கள் (Vu California 65 inch Glo MiniLED TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4கே கியூஎல்இடி (4K QLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz விஆர்ஆர் (VRR) ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மாடலாக வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி கிடைக்கிறது.
மேலும், 178 டிகிரி வைடு வியூவிங் ஆங்கிள், கியூடி மினிஎல்இடி (QD MiniLED) மற்றும் 600 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் (HDR Brightness) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபுல் அரேய் லோக்கல் டிம்மிங் (Full Array Local Dimming) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏஐ பிக்சர் (AI Picture), ஏஐ கான்ட்ராஸ்டு (AI Contrast), ஏஐ கலர் (AI Colour), ஏஐ அப்ஸ்கேல் (AI Upscale) மற்றும் எம்இஎம்சி (MEMC) கொண்ட மாடலாக இந்த வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி கிடைக்கிறது. கிரிக்கெட் மோட் (Cricket Mode) மற்றும் சினிமா மோட் (Cinema Mode) உள்ளது. ஐ புரொடெக்சன் மோட் (Eye Protection Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.
50W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 1 ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் 2 வூப்பர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. டீப் பேஸ் அவுட்புட் எதிர்பார்க்கலாம். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி கிடைக்கிறது.
மேலும், டயலாக் என்ஹான்சர் (Dialogue Enhancer), ஆடியோ ஒன்லி மோட் (Audio Only Mode) மற்றும் சினிமா சவுண்ட் (Cinema Sound Mode) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஜெமினி அசிஸ்டன்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டிவ்வாய்ஸ் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கிறது.
16 ஜிபி மெமரி + 2 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த வியூ கலிபோர்னியா 65 இன்ச் குளோ மினிஎல்இடி டிவி கிடைக்கிறது. வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யூஎஸ்பி போர்ட் (USB Port), ஏர்பிளே (Airplay), கூகுள் குரோம் காஸ்ட் (Google Chrome Cast) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளையும் இந்த குளோ மினிஎல்இடி டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
