வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் 50 இன்ச் டிவி.. 4K எச்டிஆர் வீடியோ.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி (Vu GloLED TV) மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக டால்பி விஷன், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த 50 இன்ச் வியூ டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 50 இன்ச் கொண்ட வியூ குளோஎல்இடி டிவி மாடலுக்கு தற்போது 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்வே இந்த டிவியை ரூ. 24499 விலையில் வாங்கிவிட முடியும்.

50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி அம்சங்கள் (50 inch Vu GloLED TV Specifications): பெசஸ் லெஸ் டிசைன் (Bezel-less Design) உடன் இந்த 50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. மேலும் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
3840 x 2160 பிக்சல்கள், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ஸ்மார்ட் அப்ஸ்கேல் (Smart Upscale), டைனாமிக் பேக்லிட் கன்ட்ரோல் (Dynamic Backlight Control), மோஷன் என்ஹான்ஸ்மென்ட் (Motion Enhancement) மற்றும் ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
அதேபோல் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட்(DTS Virtual X Sound Enhancement), டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளிட்ட சிறப்பான ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவியில் இந்த டிவியில் 24W ஸ்பீக்கர்கள் வருகின்றன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்
குறிப்பாக ஆட்டோ வால்யூம் கன்ட்ரோல் (Auto Volume Control) மற்றும் கிரிக்கெட் & சினிமா சவுண்ட் மோட் (Cricket & Cinema Sound Mode) ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இந்த 50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி ஆனது வியூஆன் ப்ராசஸர் (VuOn Processor) உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
மேலும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த 50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
இதுதவிர விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கொண்டகேம் மோட் (Game Mode), ஏஎல்எல்எம் (ALLM), கிராஸ்ஹேர் (Crosshair), கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) ஆகிய பீச்சர்கள் வருகின்றன குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த வியூ குளோஎல்இடி டிவி ஸ்மார்ட் டிவி
உருவாக்கப்பட்டுள்ளது.

16 ஜிபி மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 50 இன்ச் வியூ குளோஎல்இடி டிவி மாடல். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட் கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான வியூ குளோஎல்இடி டிவி (Vu GloLED TV) மாடல்.
எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), எல்ஏஎன் (LAN), வை-பை (Wi-Fi), ப்ளூடூத், போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 50 இன்ச் கொண்ட வியூ குளோஎல்இடி டிவி மாடலில் உள்ளன. மேலும் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications