Home
Gadgets

வாய்ப்பில்ல ராஜா.. இதை விட கம்மி விலையில் 4K டிவி கிடைக்காது.. 16ஜிபி மெமரி.. டால்பி விஷன்.. எந்த மாடல்?

வியூ (Vu) நிறுவனத்தின் 43 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷன், 16ஜிபி மெமரி, பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த வியூ டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43GLOLED25 என்ற மாடல் நம்பர் கொண்ட வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வாய்ப்பில்ல ராஜா.. இதை விட கம்மி விலையில் 4K டிவி கிடைக்காது..

வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் வியூஆன் 1.5 பிராசஸர் (VuOn 1.5 Processor) உடன் இந்த வியூ 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஜி52 கிராபிக்ஸ் கார்டு வசதியும் வியூ ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)மூலம் இந்த வியூ டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

குரோம்காஸ்ட் ஆதரவு கொண்டுள்ளது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் இந்த வியூ டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வியூ நிறுவனம்.

டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்(DTS Virtual X Sound)ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் பல சவுண்ட் மோட்கள் உள்ளன. பின்பு இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்கள் உள்ளன.

வைஃபை, ப்ளுடூத், ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டபல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV with Dolby Vision price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X