Home
Gadgets

மளமளவென குறைந்த 4K ஸ்மார்ட் டிவி விலை.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. 50W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

கடந்த மாதம் வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடல் ஆனது ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னணி நிறுவனமான வியூ தற்போது 43 இன்ச் டிவியின் விலையை குறைத்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். சரி இப்போது வியூ 43 இன்ச் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (43CA) மாடலுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

மளமளவென குறைந்த 4கே ஸ்மார்ட் டிவி விலை.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (Vu 43 inch 4K Smart Google TV Specifications): வியூ 43 இன்ச் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி.

அதேபோல் பெசல் லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் இந்த வியூ டிவியில் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு புதிய கூகுள் அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

Vuon பிராசஸர் உடன் இந்த அசத்தலான வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஜி52 கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர்
ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மளமளவென குறைந்த 4கே ஸ்மார்ட் டிவி விலை.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது.

குறிப்பாக ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்ர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X