வாய்ப்பில்ல ராஜா.. இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் Vu 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 108 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 43CA என்ற மாடல் நம்பர் கொண்ட வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த 4கே டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (Vu 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வியூ 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பிரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி.
பெசல் லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் இந்த வியூ டிவியில் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு புதிய கூகுள் அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
அதேபோல Vuon பிராசஸர் உடன் இந்த அசத்தலான வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஜி52 கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது.
வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது. அதாவது வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.


Click it and Unblock the Notifications








