வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் Vu 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் வியூ நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி ஆடியோ, 16ஜிபி ஸ்டோரேஜ், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் வியூ ஸ்மார்ட் டிவி மாடல்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20249 விலையில் வாங்க முடியும்.

வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (Vu 43 inch 4K Smart Google TV Specifications): இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் பெசல் லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் இந்த வியூ டிவியில் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
தரமான Vuon பிராசஸர் உடன் இந்த அசத்தலான வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஜி52 கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் வசதிகளுக்கு இந்த டிவி மிகவும் அருமையாக பயன்படும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. எனவே பல்வேறு புதிய அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவயில் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்ர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவியில் பல்வேறு சவுண்ட் மோட்கள் (Sound Modes) உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








