அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 200எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. இந்தியாவுக்கு வருகிறது Vivo போன்கள்..
விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்200 சீரிஸ்(Vivo X200 series) போன்களை ஏற்கனவே சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது விவோ எக்ஸ்200 சீரிஸ் டீசர் இப்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே வரும் நாட்களில் இந்த விவோ எக்ஸ்200, விவோ எக்ஸ்200 ப்ரோ போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக தனித்துவமான கேமரா வசதி மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த போன்களின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டிமென்சிட்டி 9400 (Dimensity 9400 SoC) சிப்செட், 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் , 32எம்பி செல்பி கேமரா, 5800mAh பேட்டரி, 90W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் விவோ எக்ஸ்200 போன் அறிமுகமாகும்.
விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டு இந்தியாவில் விவோ எக்ஸ்200 ப்ரோ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இமோர்ட்டாலிஸ் G925 GPU ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 ப்ரோ போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

6000mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இந்தியாவில் ரூ.63999 பட்ஜெட்டில் விவோ எக்ஸ்200 சீரிஸ் போன்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பாக அம்சங்களுடன் இந்த போன்கள் இந்தியாவுக்கு வரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications