Home
Gadgets

Vivo அறிமுகம் செய்யும் புதிய விவோ ஸ்மார்ட் வாட்ச் இது தான்! இந்தியாவில் என்ன விலை எதிர்பார்க்கலாம்!

விவோ நிறுவனம் இந்த மாதம் செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று தனது புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. கூடுதலாக, இப்பொழுது விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் பற்றிய முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வரவிருக்கும் ஸ்மார்ட் வாட்சின் நேரடி படங்களுடன் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த விவோ வாட்ச் என்ன விலையில் இந்திய சந்தையில் களமிறங்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

 விவோவின் ஸ்மார்ட் வாட்ச்

விவோவின் ஸ்மார்ட் வாட்ச்

கிஸ்மோசினா வழியாக ஒரு சீன சில்லறை விற்பனையாளர் விவோ வாட்சிற்கான டீஸர் புகைப்படங்களை வெளியீட்டுள்ளார். டிவிட்டர் பக்கத்தின் படி, விவோ வாட்ச் ஆரஞ்சு, கருப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் வருகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட் வாட்ச் செப்டம்பர் 22 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.

42 மிமீ மற்றும் 46 மிமீ டயல்

42 மிமீ மற்றும் 46 மிமீ டயல்

வெய்போவில் உள்ள மற்றொரு டிப்ஸ்டரின் தகவலின் படி, விவோ ஸ்மார்ட் வாட்ச் 42 மிமீ மற்றும் 46 மிமீ என இரண்டு டயல் அளவுகளில் வரக்கூடும் என்ற கசிவு தகவல்களும் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த விவோ வாட்ச் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாடியுடன் AMOLED டிஸ்பிளே கொண்ட வட்ட வடிவ டையலுடன் வருகிறது. விவோ ஸ்மார்ட் வாட்சில் லெதர் மற்றும் ரப்பர் ஸ்ட்ராப் என இரண்டு வகையிலும் கிடைக்கும்.

18 நாட்கள் பேட்டரி ஆயுள்

18 நாட்கள் பேட்டரி ஆயுள்

விவோ வாட்ச் FunTouchOS உடன் வரக்கூடும், மேலும் இது 18 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்க கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஷாடோவ், ஃபெங்ஷாங், மோச்சா மற்றும் மிக்சியா ஆகிய 4 வண்ணங்களில் வரும். மேலும் இந்த ஸ்மார்ட் வாட்சில் புளூடூத் எஸ்.ஐ.ஜி சான்றளித்தபடி இணைப்பிற்காக புளூடூத் 5.0 வழங்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனுடன் நொடியில் இணைந்துவிடும்.

இந்திய விலை என்னவாக இருக்கும்?

இந்திய விலை என்னவாக இருக்கும்?

விவோ வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இதில் துல்லியமான கண்காணிப்பிற்காக இதய துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் உள்ளடக்க டிராக்கர் மற்றும் பணம் செலுத்துவதற்கான என்எப்சி போன்ற சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி விவோ வாட்ச் தோராயமாக ரூ .10,000 என்ற விலையில் இந்திய சந்தையில் விரைவில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Watch Will Reportedly Launch On September 22 In China Know The Key Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X