Home
Gadgets

ஆளுக்கு 1 வாங்குவீங்க.. eSIM.. ஜிபிஎஸ்.. 21 நாள் பேட்டரி.. அறிமுகமானது vivo ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ எஸ்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் விவோ வாட்ச் ஜிடி (vivo WATCH GT) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது 21 நாட்கள் பேட்டரி பேக்கப், ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வாட்ச் ஜிடி மாடல். மேலும் இந்த விவோ ஸ்மார்ட்வாட்ச் மாடலின விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆளுக்கு 1 வாங்குவீங்க..அறிமுகமானது vivo ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

விவோ வாட்ச் ஜிடி அம்சங்கள் (vivo WATCH GT specifications): 1.85-இன்ச் 2.5டி கர்வ்ட் அமோலெட் ( 2.5D curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. மேலும் 390×450 பிக்சல்ஸ், ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

குறிப்பாக விவோ வாட்ச் ஜிடி ஆனது ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor),உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் கொண்டுள்ளது.

ஆளுக்கு 1 வாங்குவீங்க..அறிமுகமானது vivo ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

100 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) மற்றும் புரொபஷனல் கோச் (Professional Coach) சப்போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் (Blood Oxygen Level), ஸ்லீப் மானிட்டர் (sleep monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர், ப்ரீத் டிரெய்னிங் (Breath Training), மென்ஸ்சுரல் சைக்கிள் (Menstrual cycle) ட்ராக்கிங் போன்ற ஆரோக்கிய அம்சங்கள் இதில் உள்ளன.

வாய்ஸ் காலிங் (voice calling)அம்சமும் இதில் உள்ளது. குறிப்பாக ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன் ஆதரவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன. அதேபோல் விவோ வாட்ச் ஜிடி ஆனது BlueOS அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

505எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ வாட்ச் ஜிடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 21 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பின்பு AI வாட்ச் ஃபேஸை ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச். இதுதவிர வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளது.

ஆளுக்கு 1 வாங்குவீங்க..அறிமுகமானது vivo ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

குறிப்பாக இ-சிம் ( eSIM) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் புளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.3 LE), ஜிபிஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.

ஆனால் விவோ வாட்ச் ஜிடி மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். அதேபோல் விவோ வாட்ச் ஜிடி மாடலின் விலை CNY 899 (இந்திய மதிப்பில் ரூ.10,330)-ஆக உள்ளது.

பிளாக் (black), ஒயிட் (white),பிங்க் (pink), ப்ளூ (blue) நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கலாம். மேலும் வரும் ஜூன் 14 இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
vivo WATCH GT with eSIM support launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X