இது வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. 505mAh பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. AI கோச்சிங்.. எந்த மாடல்?
2.5D கர்வ்ட் டிசைன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 22 நாட்கள் பேக்கப் கொண்ட 505mAh பேட்டரி, 50 மீட்டர்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட 5ஏடிஎம் ரேட்டிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ கோச்சிங், ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களுடன் விவோ வாட்ச் 5 (Vivo WATCH 5) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்வாட்ச் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்த சீன மார்கெட்டே மிரளும்படி ஒரே நாளில் விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra), விவோ வி200எஸ் (Vivo X200s), விவோ பேட்5 ப்ரோ (Vivo Pad5 Pro), விவோ பேட் எஸ்இ (Vivo Pad SE) மற்றும் விவோ வாட்ச் 5 மாடல்கள் களமிறங்கின. இதில் 505mAh பேட்டரியுடன் விவோ வாட்ச் 5 மாடலானது ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.

விவோ வாட்ச் 5 அம்சங்கள் (Vivo WATCH 5 Specifications): இந்த விவோ மாடலில் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 2.5D கர்வ்ட் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், ஏஓடி மோட் (AOD Mode) சப்போர்ட் கொடுக்கிறது.
22 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி 505mAh பேட்டரி கொடுக்கிறது. ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) பயன்படுத்தினால் 11 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. இதில் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மோடும் இருக்கிறது. ஆகவே, ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி வருகிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும்படி 5ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
ஆகவே, 50 மீட்டர்கள் ஆழம் வரையில் இந்த விவோ வாட்ச் 5 மாடலானது தாக்குப்பிடிக்கும். ப்ளூ ஓஎஸ் 2.0 (blue OS 2.0) கிடைக்கிறது. ஆகவே, வீசாட் (WeChat), ஆப் ஸ்டோர் (App Store) மற்றும் காலிங் பீச்சர்கள் கிடைக்கின்றன. ப்ளூடூத் காலிங் செய்வதற்காக இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன் கிடைக்கிறது. ப்ளூடூத் மட்டுமல்லாமல், கூடுதல் கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

ஆகவே, ஜிபிஎஸ் (GPS), பெய்டுவ் (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galile) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைக்கிறது. மேலும், என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ ரன்னிங் கோச் (AI Running Coach), இன்டலிஜென்ட் ஸ்போர்ட்ஸ் மோட் ரிககனைசேஷன் (Intelligent Sports Mode Recognition) போன்ற பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பீச்சர்களை கொடுக்கிறது.
ஆகவே, அவுட்டோர் ரன்னிங், வாக்கிங் உள்ளிட்ட ஆக்டிவிட்டிகளை ரிககனைசேஷன் செய்து கொள்ளும். அதேபோல ஏஐ மூலம் ரன்னிங் அசிஸ்டன்ஸ் கிடைக்கும். இதுபோக ஹெல்த் ஆப் மூலம் ஃபிட்னஸ் கோர்ஸ்கள் (Fitness Courses) கிடைக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் மொத்தமாக 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor) போன்ற ஹெல்த் சென்சார்கள் மட்டுமல்லாமல், ஆக்டிவிட்டிகளுக்காக ஆக்சிலரேஷன் சென்சார், கைரோஸ்கோப், ஜியோமேக்னட்டிக், ஆம்பியன்லைட், ஹால் போன்ற சென்சார்களும் கிடைக்கின்றன. இந்த சென்சார்கள் மூலம் ஹெல்த் மானிட்டரிங் கிடைக்கிறது.
ஆகவே, 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டரிங் முதல் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் வரையில் கவனத்து கொள்ளலாம். டார்க் நைட் பிளாக், மூன்லைட் ஒயிட், பிளாக் லெதர் போன்ற கலர் வேரியண்கள் கிடைக்கின்றன. சீனாவின் யுவான் அடிப்படையில் கணக்கிட்டால், இந்திய மதிப்பில் ரூ.11,685 ஆக விலை இருக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications