Vivo Vision வந்தாச்சு.. விவோவின் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்.. Apple Vision Pro-வின் அட்டை காப்பி!
விவோவின் முதல் எம்ஆர் ஹெட்செட் ஆக விவோ விஷன் (Vivo Vision) சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. போவோ ஃபோரம் ஃபார் ஆசியா வருடாந்திர மாநாடு 2025 இல் விவோ விஷன் வெளியிடப்பட்டது. இது கடந்த 2023 இல் வெளியிடப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் விஷன் ப்ரோவுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது.
விவோவின் இந்த ப்ரோட்டோடைப் (Prototype) ஆனது 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நிறுவனம் பகிர்ந்துள்ள விவோ விஷனின் புகைப்படங்களின் வழியாக, இந்த ஹெட்செட்டில் ஸ்கி காகில்ஸ்களை போன்ற கிளாஸ்கள் இருப்பதை காணமுடிகிறது.

ஆப்பிளின் ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை போலவே, விவோ விஷனில் உள்ள விசர், பல்வேறு ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அம்சங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பல சென்சார்கள் இருப்பதை குறிக்கிறது. விவோ விஷன் ஃபிரேமின் அடிப்பகுதியில் 2 சென்சார்களை வெளிப்படையாக காண முடிகிறது. அவைகள் கை மற்றும் விரல் சைகை கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படலாம்.
விவோ விஷனை அணிய ஏதுவாக ஒரு தடிமனான ஹெட் பேண்டையும் காண முடிகிறது, இதுவும் ஆப்பிள் விஷன் ப்ரோவில் காணப்படுவதை போலவே இருக்கிறது. விவோவின் இந்த ஹெட்செட் சுயாதீனமாக இயங்குமா அல்லது கணினியுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதுகுறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
மேலும் விவோ விஷன் எம்ஆர் ஹெட்செட்டின் விலை எவ்வளவு என்பது குறித்தும், விவோ நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை. ஆனால் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு முன்மாதிரி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த ஹெட்செட்டின் மற்ற முக்கிய அம்சங்கள் மற்றும் இதற்கான ஓஎஸ் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் விஷன் ப்ரோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 3,499 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகமானது. அதாவது இந்திய ரூபாய் மதின்பின்படி தோராயமாக ரூ.2,90,000 ஆகும். ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆனது சோலோ க்னிட் பேண்ட் (Solo Knit Band) மற்றும் டூயல் லூப் பேண்ட் (Dual Loop Band) உடன் ஷிப்பிங் செய்யப்படுகிறது
இந்த பேக்கேஜில் ஒரு லவ்ட் சீல் (Light Seal) மற்றும் இரண்டு லைட் சீல் குஷன்கள் (Light Seal Cushions) கூடவே பாலிஷிங் க்ளாத்தும் (Polishing cloth) இருக்கும். மேலும் ஒரு பேட்டரி (Battery), ஒரு யூஎஸ்பி டைப்-சி கேபிள் (USB Type-C cable), ஒரு யூஎஸ்பி டைப்-சி அடாப்டர் (USB Type-C adapter) மற்றும் ஹெட்செட்டின் முன்பக்கத்திற்கான ஆப்பிள் விஷன் ப்ரோ கவர் (Apple Vision Pro Cover) ஆகியவைகளும் இருக்கும்.
இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆனது விஷன்ஓஎஸ் (visionOS) மூலம் இயங்குகிறது. இது ஹை-ரெசல்யூஷன் உடனான 2 மைக்ரோ-ஓஎல்இடி டிஸ்பிளேக்களை (High-resolution micro-OLED displays) கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஆப்பிளின் எம்2 சிப்களால் (Apple's M2 Chip) இயக்கப்படுகிறது.
மேலும் ஆப்பிளின் இந்த மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட் ஆனது 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோஃபோன்களிலிருந்து இன்புட் ப்ராசஸை பெறும் ஆர்1 சிப்பையும் கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஒரு முப்பரிமாண யூஸர் இன்டர்பேஸ் மற்றும் ஒரு பயனரின் கண்கள், கைகள் மற்றும் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் இன்புட் சிஸ்டமை கொண்டுள்ளது.
மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோவில் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஐபேட்ஓஎஸ் (iPadOS) அடிப்படையிலான 1 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கள் (Apps) அணுக கிடைக்கும். ப்ரொடெக்டிவிட்டி தேவைகள் (Productivity Needs) உள்ள பயனர்கள் இந்த ஹெட்செட்டை மேஜிக் கீபோர்டு (Magic Keyboard) மற்றும் டிராக்பேடு (Trackpad) உடனும் இணைக்கலாம். Photo Courtesy: VIVO


Click it and Unblock the Notifications








