சும்மா கிழி.. 52 மணி நேர பிளேபேக்.. 12எம்எம் டிரைவர்.. ஸ்பாஷியல் ஆடியோ.. 52dB நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 52 மணி நேரங்களுக்கு பிளேபேக் மட்டுமல்லாமல், 52dB நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட டிரிபிள் மைக்ரோபோன்கள், ஸ்பாஷியல் ஆடியோ கொண்ட 12எம்எம் டைனாமிக் டிரைவர்கள், கேமிங் பிரியர்களுக்கான 44ms லோவ் லேட்டன்சி மோட் போன்ற பீச்சர்களுடன் விவோ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ (Vivo TWS Air3 Pro) களமிறங்கி இருக்கிறது. IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ப்ளூஓஎஸ் கனெக்டிவிட்டி போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடும் இந்த மாடலின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ் போல்டு5 மாடலுடன் இந்த விவோ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் எப்படியும் வெளியாகும் என்பதால், இந்தியாவிலும் இதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆடியோ மற்றும் வாய்ஸ் கால்களுக்கு பல்வேறு பீச்சர்களை கொடுக்கிறது. அதேபோல பேட்டரி பேக்கப்பிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

விவோ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ அம்சங்கள் (Vivo TWS Air3 Pro Specifications): இந்த விவோ மாடலில் ஸ்டீரியோ ஆடியோவில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி டீப்எக்ஸ் 3.0 (DeepX 3.0) மற்றும் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைக்கிறது. இதுபோக ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) மற்றும் எல்சி3 (LC3) கோடெக் சப்போர்ட் கொண்ட 12எம்எம் டைனாமிக் டிரைவர் கிடைக்கிறது.
ஆடியோவுக்கு மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கும் பீச்சர்களை கொடுக்கிறது. ஆகவே, விவோ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ மாடலில் 52dB நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) சப்போர்ட் கொண்ட மூன்று மைக்குகள் பேக் செய்யப்பட்டுள்ளன. இதுபோக ஏஐ கால் நாய்ஸ் ரெடக்சன் (AI Call Noise Reduction) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி சப்போர்ட் உள்ளது.
ஆகவே, 44ms லோவ் லேட்டன்சி மோடில் (Low Latency Mode) கேமிங் விளையாடலாம். ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, டிவைஸ் டூ பட்ஸ் கனெக்டிவிட்டி பக்காவாக எதிர்பார்க்கலாம். இதுபோக ப்ளூஓஎஸ் (BlueOS) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த எக்ஸ் போல்டு5 மாடலின் பேக்கப் பற்றி பார்க்கையில், சார்ஜிங் கேஸ் மூலம் 52 மணி நேரங்கள் பிளேபேக் வருகிறது.
அதேபோல இயர்பட்களில் 9.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், இந்த பிளேபேக் கிடைக்கும். இந்த மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கிடைக்கிறது. ஆகவே, டைப்-சி போர்ட் (Type-C Port) மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 3 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கிறது. இதுவொரு டச் கன்ட்ரோல் மாடலாகும்.
ஆகவே, இயர்பட்களில் கஸ்டமைசபிள் டச் கன்ட்ரோல் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதில் கால், வால்யூம், ரிமோட் கேமரா போன்ற கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. இதுபோக வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபைண்ட் ஹெட்போன் போன்ற ஸ்மார்ட் பீச்சர்களை கொடுக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
விவோ டிடபுள்யூஎஸ் ஏர்3 ப்ரோ விலை (Vivo TWS Air3 Pro Price): இந்த மாடலின் விலை ரூ.2,379ஆக இருக்கிறது. இது சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட விலையாகும். ஆகவே, மாறுதல்கள் இருக்கலாம். ஜூலை மாதம் விற்பனை தொடங்க இருக்கிறது. ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications