பின்னி எடுக்குறாப்ல.. 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. புது Vivo பேட்.. எந்த மாட
விவோ பிரியர்கள் எதிர்பார்த்தபடி பக்கா பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் விவோ பேட்5இ (Vivo Pad5e) சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த விவோ பேட்5இ டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போன்களுடன் இந்த விவோ பேட்5இ டேப்லெட் மாடலும் அறிமுகமாகி இருக்கிறது. விவோ பென்சில்3 (Vivo Pencil3) மற்றும் விவோ ஸ்மார்ட் டச் கீபோர்ட் 5 (Vivo Smart Touch Keyboard 5) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, லேப்டாப் மாடல்களுக்கு நிகரான அவுட்புட்டை இந்த டேப்லெட்டில் எதிர்பார்க்கலாம்.#

அதேபோல ஸ்டாண்டர்ட் எடிஷன் மற்றும் சாப்ட் லைட் எடிஷன் என்று வேரியண்ட்களை கொடுக்கிறது. எச்டிஆர்10 (HDR10), ட்ரூ டோன் ஹை கலர் (True Tone High Color), ஃபுல் ஸ்கிரீன் ஐ-புரொடெக்சன் டிஸ்பிளேவை கொடுக்கிறது. பேட்டரி மற்றும் ஆடியோ பீச்சர்களும் பக்காவாகவே இருக்கின்றன. விரிவான பீச்சர்களை பார்த்துவிட்டு, விலைக்கு செல்லலாம்.
விவோ பேட்5இ அம்சங்கள் (Vivo Pad5e Specifications): இந்த விவோ டேப்லெட் மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது.
12.05 இன்ச் (2800 x 1968 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.8K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அதேபோஸ 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. ஆகவே, கேமிங் மட்டுமல்லாமல் வீடியோ பிரியர்களுக்கும் பக்கா அவுட்புட் கிடைக்கும். இதுபோக டிசி டிம்மிங் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப 4 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. இந்த விவோ பேட்5இ டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 10,000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 6.62 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,945ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,689ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,432ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,424ஆகவும் இருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட சாப்ட்-லைட் எடிஷன் வேரியண்ட்டின் விலை ரூ.27,440ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட சாப்ட்-லைட் எடிஷன் வேரியண்ட்டின் விலை ரூ.31,183ஆகவும் இருக்கிறது. அக்டோபர் 17ஆம் தேதி முதல் சீன மார்கெட்டில் விற்பனை தொடங்குகிறது. இதற்கு அடுத்து இந்திய வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








