மார்கெட்டே அதிருது.. மிட்-ரேஞ்ல 12050mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 16GB ரேம்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த டேப்லெட் மார்கெட்டே அதிரும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 13 இன்ச் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12050mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் விவோ பேட்5 ப்ரோ (Vivo Pad5 Pro) வெளியாகி இருக்கிறது. இதுபோக 8 ஸ்பீக்கர்கள், விவோ பென்சில்3, விவோ ஸ்மார்ட் டச் கீ-போர்ட் 5 ப்ரோ போன்ற கூடுதல் அசசரிஸ்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த விவோ பேட்5 ப்ரோ டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட பிரீமியம் லேப்டாப் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை ஒரு டேப்லெட்டில் கொடுத்தால் அதன் பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்குமோ, அதைத்தான் இந்த விவோ பேட்5 ப்ரோ டேப்லெட்டில் பார்க்க முடிகிறது. டிஸ்பிளே தொடங்கி, சிப்செட், பேட்டரி மற்றும் ரேம் மட்டுமல்லாமல் ஆடியோ, கேமிங் பீச்சர்கள் போன்ற அனைத்திலும் பிரீமியம் காட்டி இருக்கிறது.

விவோ பேட்5 ப்ரோ அம்சங்கள் (Vivo Pad5 Pro Specifications): இந்த விவோ டேப்லெட்டில் 13 இன்ச் (3096 x 2064 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 3.1K ரெசொலூஷன், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 1.07 கலர் டெப்த் மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது.
1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஹை-பிரைட்னஸ் ஐ புரொடெக்சன் (High Brightness Eye Protection) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்கும்படி 8 ஸ்பீக்கர்கள் அடங்கிய பனோரமிக் அகவ்ஸ்டிக் சிஸ்டம் (Panoramic Acoustic System) கிடைக்கிறது. ஆகவே, ஸ்டீரியோ அனுபவம் பிரீமியமாக இருக்கும்.

சிப்செட்: பிரீமியம் மாடலாக இருப்பதால், சிப்செட் மற்றும் ஓஎஸ் அவுட்புட்டிலும் குறையில்லாமல் இருக்கிறது. ஆகவே, ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400 3என்எம் (Octa Core Dimensity 9400 3nm) சிப்செட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் மல்டி மீடியா மற்றும் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. கேமிங்குக்கு ஏற்ப இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) வருகிறது.
ரேம் + மெமரி: இந்த விவோ பேட்5 ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட் இருக்கிறது.

மேலும், அல்ட்ரா லைட் எடிஷனில் 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ஷூட், நைட் சீன் (Night Scene), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) பீச்சர்கள் உள்ளன.
பேட்டரி: இந்த டேப்லெட்டில் கேமிங் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 12050mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் பவர் சேவிங் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 120FPS கேம் சூப்பர் ஃபிரேம் வருகிறது.
கலர்கள்: இந்த விவோ பேட்5 ப்ரோ மாடலில் லைட் ஃபெதர் ஒயிட் (Light Feather White), கிளவுட் பிங்க் (Cloud Pink), ஸ்பிரிங் டைட் ப்ளூ (Spring Tide Blue) மற்றும் கோல்ட் ஸ்டார் கிரே (Cold Star Gray) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இதில் லைட் ஃபெதர் ஒயிட் கலரில் மட்டுமே அல்ட்ரா லைட் எடிஷன் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த லைட் எடிஷனானது, 5.96 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

அதேபோல 578 கிராம் எடை மட்டுமே வருகிறது. இது அல்ட்ரா ஸ்லிம் பாடி எதிர்பார்க்கலாம். மற்ற மாடல்களானது 6.07 எம்எம் தடிமன் மற்றும் 635 கிராம் எடை வருகிறது. இந்த விவோ டேப்லெட்டின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது.
விவோ பேட்5 ப்ரோ விலை (Vivo Pad5 Pro Price): இந்த விலை சீனாவின் யுவானில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, அவ்வப்போது மாறக்கூடியாதாகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,753ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,912ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,388ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,865ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டேப்லெட்டின் விலை ரூ.45,182ஆகவும் இருக்கிறது. அதேபோல அல்ட்ரா லைட் எடிஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,182ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.50,976ஆகவும் இருக்கிறது.
விவோ பேட்5 ப்ரோ விற்பனை (Vivo Pad5 Pro Sale): இப்போது, சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அங்கு விற்பனை தொடங்குகிறது. ஆனால், அல்ட்ரா லைட் எடிஷனில் விற்பனையானது ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விற்பனைக்கு பிறகு குளோபல் மற்றும் இந்திய வெளியீடு தொடர்பான விவரங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications