என்னது அவ்ளோதானா? பட்ஜெட்ல 8500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 12.3 இன்ச் டிஸ்பிளே.. எந்த டேப்லெட்?
மலிவான பட்ஜெட்டில் 12.3 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 8500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓர்ஜின் ஓஎஸ் 5 மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டுடன் விவோ பேட் எஸ்இ (Vivo Pad SE) வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ பேட் எஸ்இ அம்சங்கள் (Vivo Pad SE Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 4 Gen 2) சிப்செட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்படி ஓர்ஜின் ஓஎஸ் 5 (OriginOS 5) மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களில் ஸ்டாண்டர்ட் எடிஷன் மற்றும் சாப்ட் லைட் எடிஷன் என்று மாடல்கள் இருக்கின்றன. ஆகவே, ஸ்டாண்டர்ட் எடிஷனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன. சாப்ட் லைட் எடிஷனிலும் மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன.
ஆகவே, முந்தைய எடிஷனை போலவே 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த விவோ பேட் எஸ்இ மாடலில் 12.3 இன்ச் (2464 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. கிளியர் ஸ்டீரியோ சவுண்ட் (Clear Stereo Sound) அவுட்புட் கொடுக்கும்படி 4 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. இந்த விவோ பேட் எஸ்இ மாடலில் 8500mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் ஸ்டாண்டர்ட் எடிஷனானது 6.8 எம்எம் தடிமன் வருகிறது.
அதேபோல 559 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதுவே சாப்ட் லைட் எடிஷனானது 6.87 எம்எம் தடிமன் மற்றும் 569 கிராம் எடை வருகிறது. இந்த விவோ டேப்லெட்டில் 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இப்போது, ஸ்டாண்டர்ட் எடிஷனில் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம். இந்த விலை சீனா நாட்டின் யுவானில் இருந்து மாற்றப்பட்டவை.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,529ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,053ஆகவும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் ரூ. 11,576 ஆகவும் இருக்கிறது. அதேபோல சாப்ட் லைட் எடிஷனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,847ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் ரூ.17,370ஆகவும் இருக்கிறது.
மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் ரூ.13,894 ஆகவும் இருக்கிறது. டார்க் கிரே (Dark Gray), ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2), டைப்-சி (Type C) ஹெட்போன் ஜாக் ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications