Home
Gadgets

மாஸா ஒரு Tablet.. 4 ஸ்டோரேஜ் மாடல்.. பட்ஜெட் விலைல Vivo அறிமுகம் செய்த புது டேப்லெட்.. பெரிய டிஸ்பிளே..

விவோ (Vivo) நிறுவனம் புதிதாக விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் (Tablet) சாதனம் 4 வேரியண்ட் மாடலுடன் பட்ஜெட் விலையில் (Budget price tablet) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 12.05" இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சம் விபரங்க இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

விவோ நிறுவனம் சீன சந்தையில் புதிதாக விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் இப்போது 12.05" இன்ச் டிஸ்பிளே (Display) உடன் LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 2.8K ரெசொலூஷன் (Resolusion) உடன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) அம்சத்துடன் வருகிறது.

மாஸா ஒரு Tablet.. 4 ஸ்டோரேஜ் மாடல்.. பட்ஜெட் விலைல Vivo புது டேப்லெட்

விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet):
இந்த டேப்லெட் சாதனம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 Chipset) உடன் மிகவும் சக்தி வாய்த்த சாதனமாக வருகிறது. இந்த புதிய விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) சாதனம் 8ஜிபி ரேம் முதல் 12ஜிபி LPDDR5x ரேம் வரை கொண்ட மாடலுடன் வருகிறது.

இதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் UFS 3.1 ஸ்டோரேஜ் (Storage) உடனும், 256GB முதல் துவங்கி 512GB UFS 4.0 உடன் வருகிறது. இந்த விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) சாதனம் 10,000mAh பேட்டரி (Battery) உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இது 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் ரியர் கேமராவுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) சாதனம் 6 ஸ்பீக்கர், 3D வீசி கூலிங் யூனிட், வைஃபை 6, ப்ளூடூத் 5.4 யுஎஸ்பி சி, ஆண்ட்ராய்டு 14 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் 8 GB RAM + 128 GB மாடல் இந்திய மதிப்பில் ரூ. 28,000 விலையில், 8 GB RAM + 256 GB மாடல் ரூ. 32,000 விலையில் வருகிறது.

விவோ பேட் 3 டேப்லெட் விலை (Vivo Pad 3 Tablet Price):
12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 35,000 மற்றும் 12 GB RAM + 512 GB மாடல் ரூ. 38,000 விலையில் வருகிறது. இது ஸ்ப்ரின்ட் டைட் ப்ளூ (Spring Tide Blue), தின் பர்பிள் (Thin Purple), மற்றும் கோல்டு ஸ்டார் க்ரேய் (Cold Star Gray) நிறங்களில் வருகிறது. இந்த புதிய விவோ பேட் 3 டேப்லெட் (Vivo Pad 3 Tablet) சாதனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Pad 3 Tablet Launched With 12 Inch LCD Display 8GB 256GB and 12GB RAM 512GB Storage Model Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X