Home
Gadgets

ஸ்மார்ட்போன்லாம் வேஸ்ட்.. Vivo டேப்லெட் தான் பெஸ்ட்.. பெரிய 12.5 இன்ச் டிஸ்பிளே.. பட்ஜெட் விலை என்ன?

(Vivo) நிறுவனம் புதிதாக விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) என்ற டேப்லெட் (Tablet) சாதனத்தை சத்தமே இல்லாமல் இணையத்தில் பட்டியலிட்டுள்ளது. இந்த புதிய விவோ பேட் 3 ப்ரோ டேப்லெட் சாதனம் நான்கு ஸ்டோரேஜ் வேரியண்ட் (Storage variant) மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் முன்விற்பனை ஜூன் 28, 2024 ஆம் தேதி முதல் துவங்கும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. விற்பனைக்கு முன்பாக தற்போது இந்த சாதனம் கூறிய சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

விவோ நிறுவனம் அதன் தயாரிப்பி சாதனங்களின் பட்டியலில் புதிதாக ஒரு அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை நிறுவனம் விவோ பேட் 3 ப்ரோ என்ற பெயருடன் கடந்த மார்ச் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இன்று விவோ நிறுவனம் சத்தமேயில்லாமல், விவோ பேட் 3 ப்ரோ சாதனத்தை அதன் வலைப்பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்லாம் வேஸ்ட்.. Vivo டேப்லெட் தான் பெஸ்ட்.. பட்ஜெட் விலை?

விவோ பேட் 3 ப்ரோ டேப்லெட் டிவைஸ் (Vivo Pad 3 Pro Tablet Device):

பட்டியலிடப்பட்ட விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) டேப்லெட் சாதனம் வரும் ஜூன் 28, 2024 ஆம் தேதி முதல் ப்ரீ சேல்ஸ் (Pre-sale) விற்பனைக்கு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய விவோ டேப்லெட் (Vivo Tablet) சாதனம் டைமென்சிட்டி 9300 சிப்செட் (Dimensity 9300 chipset) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த டிவைஸ் 4 வேரியண்ட் மாடல்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய விவோ பேட் 3 ப்ரோ சாதனம் 8 GB ரேம் (RAM) + 128GB ஸ்டோரேஜ் (storage), 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்கள் 3 நிறங்களில் வருகிறது. அது பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

புதிய விவோ பேட் 3 ப்ரோ டேப்லெட் டிவைஸ் (Vivo Pad 3 Pro Tablet Device) சாதனம் ஸ்ப்ரிங் டைட் ப்ளூ (Spring Tide Blue), தின் பர்பிள் (Thin Purple) மற்றும் கோல்டு ஸ்டார் க்ரேய் (Cold Star Gray) ஆகிய 3 நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவோ பேட் 3 ப்ரோ டேப்லெட் சாதனம் குறித்த தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

விவோ பேட் 3 ப்ரோ விலை (Vivo Pad 3 Pro Price):

இருப்பினும் இது மறுபெயரிடப்பட்ட iQOO Pad 2 சாதனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த iQOO Pad 2 சாதனம் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து விவோ பேட் 3 ப்ரோ டேப்லெட் சாதனம் என்ன அம்சங்களை பெரும் என்பதை நாம் கணிக்க முடிகிறது. விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) சிறப்பம்ச விபரங்கள் இதோ.

விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) சாதனம் 12.05" இன்ச் அளவு கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் சாதனம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 chipset) உடன் வெளிவரும்.

இந்த டேப்லெட் சாதனம் LPDDR5x RAM உடன் UFS 3.1 / UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 10,000mAh பேட்டரி மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் பின்புறத்தில் 8MP ரியர் கேமராவுடன் LED பிளாஷ் அம்சத்தை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை கொண்டிருக்குறது. இது பட்ஜெட் விருப்பமாக ரூ. 20,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Pad 3 Tablet Launched With 4 Storage Variant and In 3 Different Colours Goes On Pre Sale From June 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X