Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப்.. AI நாய்ஸ் கேன்சலேஷன்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் புதிய விவோ பட்ஸ் (Vivo Buds) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அறிமுக சலுகையுடன் கிடைக்கும் இந்த விவோ பட்ஸ் மாடலில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப், ஹை-ரெசொலூஷன் டிரைவர், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட டூயல் மைக்குகள் கிடைக்கின்றன. முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரூ.1,000 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைப்பதால், மியூசிக் பிரியர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. ஸ்பாஷியல் ஆடியோ, மல்டி-பாய்ன்ட் கனெக்டிவிட்டி மற்றும் கேமிங் லோவ் லேட்டன்சி உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. நீலகிரி கிரீன் (Nilgiri Green) மற்றும் பசால்ட் பிளாக் (Basalt Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப்.. AI நாய்ஸ் கேன்சலேஷன்!

விவோ பட்ஸ் அம்சங்கள் (Vivo Buds Specifications): 10 எம்எம் ஹை-ரெசொலூஷன் ஸ்பீக்கர் டிரைவர் (High-Resolution Speaker Driver) கொண்ட மாடலாக இந்த விவோ பட்ஸ் இருக்கிறது. மெகா பேஸ் (Mega Bass), கிளியர் வாய்ஸ் (Clear Voice), கிளியர் ஹை பிட்ச் (Clear High Pitch) மற்றும் ஆடியோ லிட்ஸ்னிங் மோட் (Audiobook Listening Mode) உள்ளிட்ட எபெக்ட்கள் கிடைக்கின்றன.

10 பேண்ட் கஸ்டமைசபிள் ஈகியூ (Customizable EQ) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ அனுபவத்தை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. தியேட்டர், கான்சர்ட் ஹால், ஸ்டூடியோ, லைவ் கான்சர்ட் உள்ளிட்ட மோட்களையும் இந்த விவோ பட்ஸ் கொடுத்து இருக்கிறது. வாய்ஸ் கால்களில் பிரீமியம் காட்டி இருக்கிறது.

ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டூயல் மைக் (Dual-Mic) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிசைனை பார்க்கையில், கிராஸ்-ப்ளோவ் டக்ட் டிசைனில் (Cross-Flow Duct Design) கிடைக்கிறது. ஒரு பட்டின் எடை 3.8 கிராம் மட்டுமே வருவதால், கம்போர்ட் மற்றும் லைட் வெயிட் விரும்பிகளுக்கு ஏற்ற மாடலாக இந்த விவோ பட்ஸ் இருக்கிறது.

டியூரபிலிட்டி கொடுக்க IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 42ms கேமிங் லேட்டன்சி (Gaming Latency) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் மல்டிபாய்ன்ட் கனெக்சன் (Bluetooth Multipoint Connection) கொண்டுள்ளது.

இன்ஸ்டன்ட் பேரிங் (Instant Pairing), பைண்ட் மை விவோ பட்ஸ் (Find My Vivo Buds) கிடைக்கிறது. ரிமோட் கேமரா கன்ட்ரோல் (Remote Camera Control) கிடைக்கிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 4 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். பட்களில் 53mAh பேட்டரி மற்றும் கேஸில் 525mAh பேட்டரி உள்ளது.

விவோ பட்ஸ் விலை (Vivo Buds Price): இந்த மாடலின் மார்கெட் விலை ரூ.2,999 ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.1,999 விலைக்கு கிடைக்கிறது. விவோ இந்தியா ஈ-ஸ்டோர் (Vivo India e-store), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.2,000 பட்ஜெட்டுக்குள் குவாலிட்டியான ஆடியோ அவுட்புட் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Buds With 50 Hours Playback Launched in India Under Rs 2000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X