OnePlus-க்கு ஆப்பு வைக்க களத்துக்கே வந்திருச்சு! புதிய டச் ஸ்கிரீன் மானிட்டர் அறிமுகம்.! விலை?
தற்போது இந்திய சந்தையில் ஒன்பிளஸ், எல்ஜி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது வியூசோனிக் நிறுவனம். அதன்படி தற்போது பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக போர்டபில் டச் ஸ்கிரீன் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது சோனிக் நிறுவனம்.
இப்போது சோனிக் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள VP-16 OLED போர்டபில் டச் ஸ்கிரீன் மானிட்டர் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக டச் ஸ்கிரீன் என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

15.6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த வியூசோனிக் VP-16 OLED மானிட்டர். பின்பு 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பான்டோன் வேலிடேஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த புதிய மானிட்டர் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
குறிப்பாக இந்த மானிட்டர் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு வழங்கப்படுகிறது. எனவே இதை மானிட்டரை பல்வேறு கோணங்களில் வைத்துப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த மானிட்டர் உடன் டிரைப்பாட் மவுன்ட் கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மானிட்டரை ஐந்து கோணங்களில் வைத்துக் கொள்ள முடியும். பின்பு இந்த மானிட்டரில் கேமராவை மவுன்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய வியூசோனிக் மானிட்டரில் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் பரவலான கலர் கமுட், 100 சதவீதம் DCI-P3 கவரேஜ், அதிக காண்டிராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த மானிட்டர் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியூசோனிக் VP-16 OLED மானிட்டர் உடன் கழற்றக்கூடிய பாதுகாப்பு கவர் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி ஆதரவு உள்ளது. மேலும் 40 வாட்ஸ் 2-வே பவர் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதைக் கொண்டு லேப்டாப் அல்லது மொபைல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்.
மினி எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த வியூசோனிக் VP-16 OLED மானிட்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டச் ஸ்கிரீன் மானிட்டரின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள வியூசோனிக் VP-16 OLED மானிட்டரின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ், எல்ஜி நிறுவனங்களின் மானிட்டர்களை விட இந்த வியூசோனிக் மானிட்டர் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








