அதிரவிடும் விலை.. 15W ஸ்பீக்கர்கள்.. எச்டிஆர்10.. புதிய 4K வியூசோனிக் புரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?
டச் ஸ்கிரீன் மானிட்டர்களை அறிமுகம் செய்து வரும் வியூசோனிக் நிறுவனம் தற்போது புதிய 4கே புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய 4கே புரொஜெக்டர் ஆனது மேம்பட்ட புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
அதாவது தற்போது எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது வியூசோனிக் நிறுவனம். குறிப்பாக எக்ஸ்பாக்ஸ் கேமிங், எச்டிஆர் 10, டஸ்ட்-ப்ரூஃப் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த வியூசோனிக் 4கே புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் (Viewsonic LX700 4K projector specification): 2500 ஏஎன்எஸ்ஐ லுமன்ஸ் ப்ரைட்னஸ் (2500 ANSI lumens brightness) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த வியூசோனிக்250 எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் மாடல். மேலும் இது 300:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் 300:1 Contrast Ratio) வருகிறது.
குறிப்பாக சோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். மேலும் இந்த புரொஜெக்டர் 0.65 டிஎம்டி டிஸ்ப்ளே சிப் மற்றும் 4கே நேட்டிவ் ஆப்டிகல் கிளாஸ் லென்ஸுடன் வருகிறது. இது சிறந்த இமேஜ் குவாலிட்டி மற்றும் அதிக ரெசல்யூஷன் வழங்குவதால் நம்பி வாங்கலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது இந்த அட்டகாசமான வியூசோனிக்250 எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர்.

240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் வழங்குகிறது வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர். அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்தபடியும் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்களில் விளையாடும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்கிறது இந்த ப்ரொஜெக்டர்.
ஐபி65 டஸ்ட் ப்ரூஃப்( IP6X dustproo), கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) வசதிகளுடன் இந்த வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதி கொடுக்கும் வகையில் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த புரொஜெக்டர் மாடலுக்கு TUV ப்ளூ லைட் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவைக் கொண்டுள்ளது வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர். இது வெளிச்சம் குறைந்த படங்களைக் கூட தெளிவாகக் காட்டும் திறன் கொண்டது. மேலும் டைனமிக் பிளாக் டெக்னாலஜி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த டெக்னாலஜி துடிப்பான வண்ணங்களை உறுதி செய்கின்றன.

15 வாட்ஸ் ஹை-குவாலிட்டி ஸ்பீக்கர்கள் ( 15W high-quality speaker) உடன் வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த புதிய புரொஜெக்டர் மாடல் ஸ்மார்ட் ஹோம் சிஸ்டங்களில் கனெக்ட் செய்து கொள்ள செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 4கே புரொஜெக்டர் மாடலில் உள்ளது. மேலும் வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியா மற்றும் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு வியூசோனிக் எல்எக்ஸ்700-4கே புரொஜெக்டர் மாடலின் விலை 9999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.1,15,408) ஆக உள்ளது.
source: gizmochina


Click it and Unblock the Notifications








