ஆர்டர் தூள் பறக்க போகுது.. 8GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. 2 Videotex டிவிகள் அறிமுகம்.. எந்த மாடல்?
வீடியோடெக்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஃபுல்எச்டி வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் ஸ்மார்ட் டிவிகளை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
டால்பி ஆடியோ, மேஜிக் ரிமோட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த வீடியோடெக்ஸ் ஸ்மார்ட் டிவிகள். இப்போது இந்த புதிய வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஃபுல்எச்டி வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் ஸ்மார்ட் டிவிகளின் (Videotex 32″ HD and 43″ FHD webOS Hub 2.0S TVs) அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வீடியோடெக்ஸ் வெப்ஒஸ் ஹப் 2 டிவிகளின் அம்சங்கள் (Videotex webOS Hub 2 TV specifications): இந்த இரண்டு டிவிகளும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேசமயம் குவாண்டம் லுமினிட் பிளஸ் டிஸ்பிளே( Quantum Luminit+ Display), 94% DCI-P3 கவரேஜ், 4கே அப்ஸ்கேலிங் (4K upscaling) உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.
வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் டிவிகள் எச்டிஆர் 10 (HDR10) மற்றும் எச்எல்ஜி(HLG) சப்போர்ட் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகளில் ஓடிடி தளங்கள் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அதேசமயம் இந்த டிவிகளில் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல்வேறு சிறப்பான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதாவது ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) மற்றும் MEMC டெக்னலாஜி உள்ளிட்ட கேமிங் அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த டிவிகள். அதேபோல் வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் டிவிகள் வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் மூலம் இயங்குகின்றன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் ஸ்மார்ட் டிவிகள் ஏஆர்எம் குவாட் கோர் (ARM Quad-Core) பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
புதிய வீடியோடெக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு டிவிகளும் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவிகளில் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளன.
வெப்கேம் சப்போர்ட் (Webcam support), ஃபேமிலி செட்டிங்ஸ் (Family Settings), ஐ-கேர் மோட் (Eye Care Mode), எச்டிஆர் சப்போர்ட் (HDR support) உள்ளிட்ட தனித்துவமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் ஸ்மார்ட் டிவிகள்.

ரிமோட் பிசி, புளூடூத் ரிமோட், ஹாட்கிகளுடன் கூடிய மேஜிக் ரிமோட் போன்ற அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த டிவிகள். டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் LG ThinQ ஆப் வசதியை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.
வீடியோடெக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் வெப்ஒஸ் ஹப் 2.0ஒஎஸ் ஸ்மார்ட் டிவிகள் நிறுவனத்தின் இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிகளின் விலை விரைவில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








