உங்களுக்கு ஒரு PA வேணுமா? இந்த Smartwatch மட்டும் யோசிக்காம வாங்குங்க!

|

Tagg Verve Connect Ultra இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Smartwatch ஆனது அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் அம்சங்களை பார்த்துவிட்டு வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பல ஹெல்த் டிராக்கர் ஆதரவுகள்

பல ஹெல்த் டிராக்கர் ஆதரவுகள்

TAGG நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வாட்ச்களும் பல ஹெல்த் டிராக்கர் ஆதரவுகளை கொண்டிருக்கிறது. 120+ விளையாட்டு முறைகள், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டுக்கான IP67 மதிப்பீட்டு ஆதரவைக் கொண்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை TAGG நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது TAGG Verve Connect Ultra மற்றும் Verve Max Buzz ஆகும். இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் பல்வேறு விளையாட்டு முறைமைகளை கொண்டிருக்கிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச்கிளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையுடன் இதன் சிறப்பம்சங்களையும் பார்க்கலாம்.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

TAGG நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்று மிட்-ரேன்ஜ் விலையிலும் மற்றொன்று ப்ரீமியம் விலையிலும் இருக்கிறது.

Tagg Verve Connect Ultra ஸ்மார்ட்வாட்ச் விலையானது ரூ.3,499 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் கிடைக்கிறது.

அதேபோல் Tagg Verve Max Buzz ஸ்மார்ட்வாட்ச் விலையானது ரூ.1,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

எந்தெந்த வண்ண விருப்பத்தில் வாங்கலாம்

எந்தெந்த வண்ண விருப்பத்தில் வாங்கலாம்

Tagg Verve Connect Ultra ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளாக், ப்ளூ மற்றும் கோல்ட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அதேபோல் Verve Max Buzz ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளாக், ப்ளூ, ஆஷ், கோல்ட் மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

Ultra மற்றும் Buzz அம்சங்கள்

Ultra மற்றும் Buzz அம்சங்கள்

Tagg Verve Connect Ultra மற்றும் Verve Max Buzz அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் வெர்வ் கனெக்ட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 368×448 பிக்சல்கள் HD ரெசல்யூஷனுடன் 600 NITS பிரகாச நிலையைக் கொண்டிருக்கிறது.

Verve Max Buzz ஆனது 500 NITS பிரைட்னஸ் மற்றும் 320×386 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே அளவு 1.81 இன்ச் ஆகும்.

நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் ப்ளூடூத் அழைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. பயனர்கள் ஒரே கிளிக்கில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.

இதில் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனும் இருக்கிறது. அதேபோல் இதில் உள்ளமைக்கப்பட்ட டயல்-பேட் மற்றும் தொடர்புகளை சேமிக்கும் திறன் இருக்கிறது.

இதன்மூலம் பயனர்கள் தங்கள் மணிக்கட்டில் இருந்தே நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

வாக்கிங், ரன்னிங் மற்றும் சைக்கிளிங்

வாக்கிங், ரன்னிங் மற்றும் சைக்கிளிங்

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் வாக்கிங், ரன்னிங் மற்றும் சைக்கிளிங் ஓட்டுதல் உள்ளிட்ட 120-க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு முறைகள் உள்ளன.

அதேபோல் இதில் இதய துடிப்பு டிராக்கர் மற்றும் SpO2 டிராக்கர் உள்ளிட்ட பல ஹெல்த் டிராக்கர்கள் ஆதரவையும் கொண்டிருக்கின்றன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன. எனவே பயனர்கள் வியர்வை அல்லது டஸ்ட் குறித்து கவலைப்பட தேவையில்லை.

இதன்மூலம் பயனர்கள் முழுமையாக வொர்க்-அவுட்டில் கவனம் செலுத்தலாம்.

கூடுதல் செயல்பாட்டிற்கான கண்காணிப்பு

கூடுதல் செயல்பாட்டிற்கான கண்காணிப்பு

புதிய Tagg Verve Connect Ultra மற்றும் Tagg Verve Max Buzz வாட்ச்கள் முழுமையான டேட்டா பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்ச்களானது நோட்டிபிகேஷன் அறிவிப்பு, நினைவூட்டல்கள், பெண்களின் உடல்நல கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

TAGG ஸ்போர்ட்ஸ் ஆப் மூலம் கூடுதல் செயல்பாட்டிற்கான கண்காணிப்பையும் பெறலாம்.

ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாமா., வேண்டாமா?

ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாமா., வேண்டாமா?

உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது என்றால் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Verve Connect Ultra and Verve Max Smartwatch launched in india by Tagg

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X